குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களில் மேற்கு வங்கம் முதலிடம்

தினமலர்  தினமலர்
குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களில் மேற்கு வங்கம் முதலிடம்

கோல்கட்டா : குறு, சிறு மற்­றும் நடுத்­தர நிறு­வ­னங்­கள் அதி­க­முள்ள மாநி­லம் என்ற சிறப்பை, மேற்கு வங்­கம் பெற்­றுள்­ளது.

இது குறித்து, மேற்கு வங்க குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்­கள் துறை செய­லர், ராஜீவ் சின்ஹா கூறி­ய­தா­வது: மேற்கு வங்க அரசு, புதிய வர்த்­த­கங்­களை உரு­வாக்கி, தொழில் முனை­வோரை ஊக்­கு­வித்து, வேலை­வாய்ப்­பு­களை அதி­க­ரிப்­ப­தில் தீவி­ர­மாக ஈடு­பட்­டுள்­ளது. இதன் விளை­வாக, 2016 -– 17ம் நிதி­யாண்­டில், அதி­க­ள­வில், குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்­களை கொண்ட, 10 மாநி­லங்­களில், மேற்கு வங்­கம், 11.62 சத­வீத பங்­க­ளிப்­பு­டன், முத­லி­டத்­திற்கு உயர்ந்­துள்­ளது. உ.பி., மஹா­ராஷ்­டிரா ஆகி­யவை, அடுத்த இடங்­களில் உள்ளன.

ஐந்து ஆண்­டு­களில், குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்­க­ளுக்கு, அதிக வங்கி கடன் வழங்­கிய சிறப்­பும், மேற்கு வங்­கத்­திற்கு கிடைத்­துள்­ளது. இந்­நி­று­வ­னங்­க­ளுக்கு, 2017ல், 1,500 கோடி டாலர் வங்கி கடன் வழங்­கப்­பட்டு உள்­ளது. மாநி­லத்­தின் மொத்த உற்­பத்­தி­யில், குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்­கள், 6 சத­வீத பங்­க­ளிப்பை வழங்­கு­கின்றன. இது, தயா­ரிப்­புத் துறை­யில், 33 சத­வீ­தம்; ஏற்­று­ம­தி­யில், 45 சத­வீ­த­மாக உள்­ளது.

அனைத்து மாநி­லங்­கள் மற்­றும் யூனி­யன் பிர­தே­சங்­களில், 2017ல், ‘பிராப்’ திட்­டம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது. இதன்­படி, தொழில் கொள்கை மற்­றும் வர்த்­தக மேம்­பாட்டு சீர்­தி­ருத்த நட­வ­டிக்­கை­களை, சிறப்­பாக மேற்­கொள்­ளும் மாநி­லங்­களில், மேற்கு வங்­கம் முத­லி­டத்தை பிடித்­துள்­ளது. இவ்­வாறு அவர் கூறி­னார்.

சர்வதேச வர்த்தக மாநாடு:
மேற்கு வங்க சர்­வ­தேச வர்த்­தக மாநாடு, கோல்­கட்­டா­வில் நேற்று துவங்­கி­யது. இரு நாட்­கள் நடை­பெ­றும் இம்­மா­நாட்­டில், முகேஷ் அம்­பானி, சுனில் மிட்­டல் உள்­ளிட்­டோ­ரு­டன், சர்­வ­தேச தொழி­ல­தி­பர்­கள் பலர் பங்­கேற்­கின்­ற­னர்.

மூலக்கதை