2017 டிசம்பர் மாதத்தில்... ஏற்றுமதி, இறக்குமதி அதிகரிப்பு; வர்த்தக பற்றாக்குறையும் உயர்வு

தினமலர்  தினமலர்
2017 டிசம்பர் மாதத்தில்... ஏற்றுமதி, இறக்குமதி அதிகரிப்பு; வர்த்தக பற்றாக்குறையும் உயர்வு

புதுடில்லி : நாட்­டின் ஏற்­று­மதி, இறக்­கு­மதி, 2017 டிசம்­ப­ரில் அதி­க­ரித்­துள்­ளது. ஏற்­று­ம­தியை விஞ்சி இறக்­கு­மதி உயர்ந்து உள்­ள­தால், மூன்று ஆண்­டு­களில் இல்­லாத அள­விற்கு, வர்த்­தக பற்­றாக்­குறை உயர்ந்­துள்­ளது.

ஏற்­று­மதி வளர்ச்­சிக்கு, பொறி­யி­யல் மற்­றும் பெட்­ரோ­லிய பொருட்­கள் பெரும் பங்கு வகித்­துள்ளன. டிசம்­ப­ரில், ஏற்­று­மதி, 12.36 சத­வீ­தம் உயர்ந்து, 2,703 கோடி டால­ராக அதி­க­ரித்­துள்­ளது. இதே மாதத்­தில், கச்சா எண்­ணெய் மற்­றும் தங்­கம் வரத்து அதி­க­ரித்­த­தால், இறக்­கு­மதி, 21.12 சத­வீ­தம் வளர்ச்சி கண்டு, 4,191 கோடி டால­ராக உயர்ந்­துள்­ளது.

இதை­ய­டுத்து, நாட்­டின் வர்த்­த­கப் பற்­றாக்­குறை, 41 சத­வீ­தம் ஏற்­றம் பெற்று, 1,488 கோடி டால­ராக அதி­க­ரித்­துள்­ளது. இது, மூன்று ஆண்­டு­களில் காணாத உயர்­வா­கும்.

பொறி­யி­யல் சாத­னங்­கள்:
கடந்த, 2017 அக்­டோ­ப­ரில் ஏற்­பட்ட, 1.1 சத­வீத சரிவை தவிர்த்து, 2016 ஆக., முதல், நாட்­டின் ஏற்­று­மதி தொடர்ந்து உயர்ந்து வரு­கிறது. பெட்­ரோ­லிய பொருட்­கள், பொறி­யி­யல் சாத­னங்­கள் ஏற்­று­மதி, 25 சத­வீ­தத்­திற்­கும் மேலாக அதி­க­ரித்­துள்­ளது. அதே சம­யம், ஆடை­கள் ஏற்­று­மதி, 8 சத­வீ­தம் குறைந்து, 133 கோடி டால­ராக சரி­வ­டைந்து உள்­ளது. ஏற்­று­ம­தி­யில், 30 முக்­கிய பிரி­வு­களில், பொறி­யி­யல் சாத­னங்­கள், பெட்­ரோ­லிய பொருட்­கள், தங்­கம் மற்­றும் நவ­ரத்­தி­னங்­கள், மருந்­து­கள், ரசா­ய­னங்­கள் உள்­ளிட்ட, 21 பிரி­வு­கள் வளர்ச்சி கண்­டுள்ளன.

கச்சா எண்­ணெய்:
தங்­கம் இறக்­கு­மதி, 71.5 சத­வீ­தம் உயர்ந்து, 339 கோடி டால­ராக ஏற்­றம் கண்­டுள்­ளது. இது, 2016 டிசம்­ப­ரில், 197 கோடி டால­ராக இருந்­தது. இதே காலத்­தில், பெட்­ரோ­லிய பொருட்­கள் மற்­றும் கச்சா எண்­ணெய் இறக்­கு­மதி, 35 சத­வீ­தம் உயர்ந்து, 766 கோடி டால­ரில் இருந்து, 1,034 கோடி டால­ராக அதி­க­ரித்­துள்­ளது.

நடப்பு நிதி­யாண்­டின், ஏப்., – டிச., வரை­யி­லான ஒன்­பது மாதங்­களில், ஏற்­று­மதி, 12.05 சத­வீ­தம் வளர்ச்சி கண்டு, 22,351 கோடி டால­ராக உயர்ந்­துள்­ளது. இது, கடந்த நிதி­யாண்­டின் இதே காலத்­தில், 19,946 கோடி டால­ராக இருந்­தது. இதே காலத்­தில், இறக்­கு­மதி, 21.76 சத­வீ­தம் உயர்ந்து, 27,789 கோடி டால­ரில் இருந்து, 33,836 கோடி டால­ராக அதி­க­ரித்­துள்­ளது.

இலக்கு எட்டப்படும்:
நடப்பு, 2017 -– 18ம் நிதி­யாண்­டில், 30 ஆயி­ரம் கோடி டாலர் ஏற்­று­ம­திக்கு இலக்கு நிர்­ண­யிக்­கப்­பட்டு உள்­ளது. இதில், ஏப்., – டிச., வரை­யி­லான ஒன்­பது மாதங்­களில், 22,351 கோடி டாலர் அள­விற்கு ஏற்­று­மதி நடை­பெற்­றுள்­ளது. அத­னால், ஏற்­று­மதி இலக்கு சுல­ப­மாக எட்­டப்­படும். தங்­கம் மற்­றும் நவ­ரத்­தின கற்­கள் இறக்­கு­மதி அதி­க­ரித்து உள்­ள­தால், வரும் மாதங்­களில், அவற்­றின் ஏற்­று­மதி உயர வாய்ப்­புள்­ளது.

எனி­னும், வர்த்­த­கப் பற்­றாக்­குறை உயர்ந்­தி­ருப்­பதை எச்­ச­ரிக்கை மணி­யாக கருதி, இறக்­கு­மதி பொருட்­கள் குறித்து ஆய்வு செய்ய வேண்­டும். அவை, உள்­நாட்டு உற்­பத்­திக்கு பயன்­ப­டு­கி­றதா அல்­லது அச்­சு­றுத்­த­லாக உள்­ளதா என்­பதை கவ­னிப்­பது அவ­சி­யம்.

-கணேஷ் குமார் குப்தா ,தலைவர், இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பு

மூலக்கதை