ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.63.61

தினமலர்  தினமலர்
ரூபாயின் மதிப்பு சரிவு  ரூ.63.61

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் ஏற்ற - இறக்கமாக உள்ள சூழ்நிலையில் ரூபாயின் மதிப்பு சரிவுடன் காணப்படுகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 12 காசுகள் சரிந்து ரூ.63.61-ஆக வர்த்தகமானது.

கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வர்த்தக பற்றாக்குறை 41 சதவீதம் உயர்ந்ததன் காரணமாக ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக நேற்று ரூபாயின் மதிப்பு ரூ.63.49-ஆக வர்த்தகமானது.

மூலக்கதை