வௌிநாட்டவர்கள் இருவர் இலங்கையில் செய்த காரியம்!

PARIS TAMIL  PARIS TAMIL
வௌிநாட்டவர்கள் இருவர் இலங்கையில் செய்த காரியம்!

மாரவில பகுதியை சேர்ந்த எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் 28 ஆயிரம் ரூபாய் பணத்தை மோசடியான முறையில் வௌிநாட்டவர்கள் இருவர் பெற்றுச்சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

 
இது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக மாரவில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
கடந்த 14ம் திகதி குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வருகை தந்த வௌிநாட்டவர்கள் இருவர் அங்கு சேவையில் இருக்கும் நபரிடம் 5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர் ஒன்றில் விலை எவ்வளவு என வினவியுள்ளனர்.
 
அதேநேரம் , மற்றைய வௌிநாட்டவர் குறித்த ஊழியரிடம் பல்வேறு கேள்விகளை கேட்டுள்ளதாக தெரிகிறது.
 
அதன்பின்னர் , இலங்கையில் உள்ள அதிக பெறுமதி கொண்ட நாணய தாள்கள் தொடர்பில் வினவியுள்ள அவர்கள் , அவற்றை பார்வையிட முடியுமா என குறித்த ஊழியரிடம் வினவியுள்ளனர்.
 
இந்நிலையில் , குறித்த வௌிநாட்டவர்கள் இருவரும் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியரிடம் இருந்து 28 ஆயிரம் ரூபாய் பணத்தை மோசடியான முறையில் சூட்சுமமாக பெற்றுள்ளனர்.
 
அதனை தொடர்ந்து , எவருக்கும் தெரியாத வகையில் குறித்த வௌிநாட்டவர்கள் இருவரும் அங்கிருந்து வௌியேறியுள்ளனர். இந்த காட்சி அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது.
 
குறித்த நிதி மோசடியினை மேற்கொண்ட பின்னர் வௌிநாட்டவர்கள் இருவரும் உந்துருளியொன்றில் தப்பிச் சென்றுள்ளதாக விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
 
இந்த வௌிநாட்டவர்கள் இருவரும் இதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் சிலாபம் நகரின் ஆடையகம் ஒன்றில் இவ்வாறு மோசடியான முறையில் பணத்தை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
 

மூலக்கதை