11 புதிய ஷோரூம்கள் துவக்கியது மலபார் கோல்டு

தினமலர்  தினமலர்
11 புதிய ஷோரூம்கள் துவக்கியது மலபார் கோல்டு

கோழிக்கோடு:பிர­பல நகைக் கடை­களில் ஒன்­றான, மல­பார் கோல்டு அண்டு டைமண்ட்ஸ் நிறு­வ­னம், கத்­தார், ஓமன், மலே­ஷியா உட்­பட ஆறு நாடு­களில், 11 புதிய ஷோரூம்­களை துவக்கி உள்­ளது.
இது குறித்து, இந்­நி­று­வ­னத்­தின் சர்­வ­தேச செயல்­பா­டு­களின் நிர்­வாக இயக்­கு­ன­ரான, ஷாம்­லால் அஹ­மது கூறி­ய­தா­வது:தற்­போது, மல­பார் கோல்டு, 197 ஷோரூம்­களை கொண்­டுள்­ளது. இதில், 90 ஷோரூம்­கள், இந்­தி­யா­வி­லும், 107 வெளி­நாட்­டி­லும் உள்ளன. 2017ல் மட்­டும், 27 ஷோரூம்­கள் துவக்­கப்­பட்டு உள்ளன. உல­க­ளா­விய விரி­வாக்க திட்­டங்­களின் ஒரு பகு­தி­யாக, உல­கின் பல்­வேறு நாடு­களில், 50 ஷோரூம்­களை, நடப்பு ஆண்­டில் துவக்க திட்­ட­மிட்டு உள்­ளோம்.இவ்­வாறு அவர் கூறி­னார்.
மேலும் இது குறித்து, இந்­நி­று­வ­னத்­தின், இந்­திய செயல்­பா­டு­களின் நிர்­வாக இயக்­கு­னர், ஓ அஷெர் கூறு­கை­யில், ‘‘மத்­திய அர­சின், ‘மேக் இன் இந்­தியா’ திட்­டத்­துக்கு வலு சேர்க்­கும் வகை­யில், நாட்­டில் அதிக ஷோரூம்­கள் மற்­றும் உற்­பத்தி பிரி­வு­களை அமைக்க, குழு­மம் திட்­ட­மிட்டு உள்­ளது. இதன் மூலம் கூடு­தல் வேலை­வாய்ப்­பு­க­ளை­யும் ஏற்­ப­டுத்த முடி­யும்,’’ என்­றார்.
மல­பார் கோல்டு அண்டு டைமண்ட்ஸ், 30 ஆயி­ரம் கோடி ரூபாய் மதிப்பு கொண்ட, மல­பார் குழு­மத்­தின் ஓர் அங்­க­மா­கும். சமீ­பத்­தில் துவக்­கப்­பட்­டுள்ள, 11 புதிய ஷோரூம்­க­ளை­யும் சேர்த்து, மொத்­தம் உல­க­ள­வில், 208 ஷோரூம்­கள் கொண்ட நிறு­வ­ன­மாக மாறி இருக்­கிறது, இந்­நி­று­வ­னம்.

மூலக்கதை