ஐயப்ப பக்தருக்கு யாழ் நீதிமன்றில் ஏற்பட்ட பரிதாபம்!

PARIS TAMIL  PARIS TAMIL
ஐயப்ப பக்தருக்கு யாழ் நீதிமன்றில் ஏற்பட்ட பரிதாபம்!

யாழ். நீதிவான் நீதிமன்ற வழக்கு ஒன்றுக்காக திறந்த மன்றில் முன்னிலையாகிய நபர் ஒருவரை மன்றைவிட்டு வெளியேறுமாறு நீதிமன்றம் பணித்துள்ளது.
 
ஐயப்ப விரதம் கடைப்பிடித்த ஒருவரே இவ்வாறு வெளியே அனுப்பப்பட்டுள்ளார்.
 
அவருடைய ஆடைகள் தொடர்பில் கண்டித்த நீதிமன்றம், அவரை மன்றைவிட்டு வெளியேறுமாறு பணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
அத்துடன், நீதிமன்ற பொலிஸ் உத்தியோகத்தரை அழைத்து “இவ்வாறான நபர்களை நீதிமன்றுக்குள் அனுமதிக்க வேண்டாம்” எனவும் மன்று கட்டளையிட்டிருப்பதாக குறிப்பிடப்படுகின்றது.
 
இதையடுத்து, ஐயப்ப சுவாமி விரதம் கடைப்பிடிப்போர் மற்றும் கறுப்பு நிற உடை அணிந்து வருவோரை யாழ். நீதிவான் நீதிமன்றுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை எனவும், நீதிமன்றின் கட்டளைக்கு அமையவே இந்த நடைமுறை பின்பற்றப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
ஐயப்ப அடியார்கள் விரதம் கடைப்பிடிக்கும் போது கறுப்பு நிற ஆடைகளை அணிவதுடன், கறுப்பு நிற சால்வையை கழுத்தில் சுற்றி, கால்களில் செருப்பின்றி விரதத்தை பின்பற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.
 

மூலக்கதை