டொயோட்டா

தினமலர்  தினமலர்
டொயோட்டா

அரசு ஊழி­யர்­க­ளுக்­கான சலுகை நீட்­டிப்புடொயோட்டா கிர்­லோஸ்­கர் நிறு­வ­னம், மத்­திய, மாநில அரசு ஊழி­யர்­க­ளுக்கு, சில சலு­கை­களை, 2016ல் அறி­மு­கம் செய்­தது. அது முடிய இருந்த நிலை­யில், டிச., 31 வரை, அதை நீட்­டித்­துள்­ளது. ஓய்வு பெற்ற அரசு ஊழி­யர்­க­ளுக்­கும், இச்­ச­லுகை வழங்­கப்­ப­டு­வ­தால், ‘டிரைவ் த நேஷன்’ எனும் இந்த முகா­முக்கு வர­வேற்பு அதி­க­ரித்­தது. அத­னால், ஒவ்­வொரு காலாண்­டாக அதை நீட்­டித்து வரு­கிறது.இந்த முகா­மில், டொயோட்டா, ‘இடி­யோஸ்’ வரிசை கார்­கள், முன்­ப­ணம் செலுத்த தேவை­யின்றி, எட்டு ஆண்­டு­கள் கடன் தவ­ணை­யில் விற்­கப்­ப­டு­கின்றன. இம்­மு­காம்­களில், ‘கரோல்லா ஆல்­டிஸ்’ காரை­யும் விற்­பனை செய்ய, அரசு ஊழி­யர்­கள் கேட்­டுக் கொண்­டதை தொடர்ந்து, அந்த காரும், முகா­மில் சேர்க்­கப்­பட்டு உள்­ளது என,அந்­நி­று­வ­னத்­தின் இயக்­கு­னர், என்.ராஜா தெரி­வித்து உள்­ளார்.

மூலக்கதை