இந்தாண்டு சல்மான் பிறந்தநாள் கொண்டாட்டம் இல்லை

தினமலர்  தினமலர்
இந்தாண்டு சல்மான் பிறந்தநாள் கொண்டாட்டம் இல்லை

பாலிவுட்டின் முன்னணி நடிகரான சல்மான் கானுக்கு வருகிற டிச., 27-ம் தேதி 52வது பிறந்தநாள். ஒவ்வொரு ஆண்டும் தனது பிறந்தநாளை பன்வல்லில் உள்ள பண்ணை வீட்டில் தான் கொண்டாடுவார். ஆனால் இந்தாண்டு அவர் அங்கு தனது பிறந்தநாளை கொண்டாடவில்லையாம். மாறாக குடும்பத்துடன் சுற்றுலா செல்ல இருக்கிறார். அது உள்நாடா, அயல்நாடா என்று தெரியவில்லை. சல்மான் கான் நடிப்பில் வருகிற டிச., 22-ம் தேதி டைகர் ஜிந்தா ஹே படம் வெளியாக உள்ளது. படம் வெளியானதும் சுற்றுலா கிளம்ப உள்ளார்.

மூலக்கதை