மோகன்லாலுக்கு வாழ்த்து சொன்ன ரஜினி..!

தினமலர்  தினமலர்
மோகன்லாலுக்கு வாழ்த்து சொன்ன ரஜினி..!

மோகன்லால் தற்போது நடித்து வரும் 'ஒடியன்' படத்தின் டீசரை சரியாக ரஜினி பிறந்தநாளன்று காலையில் தான் வெளியிட்டனர். மோகன்லாலின் இளமை லுக்கை அதற்கு மறுநாள் வெளியிட்டனர். இந்தநிலையில் மோகன்லாலின் 'ஒடியன்' டீசரை பார்த்துவிட்டு ரஜினி பாரட்டினார் என்கிற தகவலை இயக்குனர் ஸ்ரீகுமார் மேனன் வெளியிட்டுள்ளார்.

மோகன்லாலை போனில் தொடர்புகொண்ட ரஜினி, அவர் எடையை குறைத்து ஸ்லிம் ஆக காணப்படும் தோற்றத்தை சிலாகித்து பாராட்டியதுடன் படக்குழுவுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தாராம். இந்த தகவலை படத்தின் இயக்குனர் ஸ்ரீகுமார் மேனனிடம் மோகன்லால் பகிர்ந்துகொண்டாராம்.

மூலக்கதை