ஹிப் ஹாப் ஆதியின் அடுத்தபடம் ஆரம்பம்

தினமலர்  தினமலர்
ஹிப் ஹாப் ஆதியின் அடுத்தபடம் ஆரம்பம்

ஆம்பள படத்தில் 'ஹிப் பாப் தமிழா' ஆதியை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார் சுந்தர்.சி. அடுத்து 'மீசையை முறுக்கு' படத்தின் மூலம் ஆதியை இயக்குநராகவும் அறிமுகப்படுத்தியதோடு, அவருக்கு வெற்றிப்பட இயக்குநர் என்ற அந்தஸ்து கிடைக்கவும் காரணமாக இருந்தார்.

மீசைய முறுக்கு வெற்றியடைந்ததும் உடனே அடுத்தப்படத்தை தொடங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் சுந்தர்.சி. ஆதியோ தன்னுடைய நிஜக்காதலில் பிசியாகிவிட்டார். இந்நிலையில் தன்னுடைய அடுத்தப்பட வேலையைத் தொடங்கியுள்ளார் ஆதி. இந்த படம் ஹாக்கி விளையாட்டை மையப்படுத்திய கதை. ஆதி அடுத்து நடிக்கும் படத்தை 'மீசையை முறுக்கு' படத்தை தயாரித்த சுந்தர்.சி.யே தயாரிக்கிறார். அறிமுக இயக்குநர் பார்த்திபன் தேசிங்கு இயக்குகிறார். இப்படத்தின் பூஜை நேற்று எளிமையாக நடந்தது.

மூலக்கதை