அதிதி பாலனுக்கு குவியும் பாராட்டு

தினமலர்  தினமலர்
அதிதி பாலனுக்கு குவியும் பாராட்டு

தமிழ் சினிமாவில் இப்படியொரு நடிகையா என்று வியக்கும் வைக்கும் அளவுக்கு அறிமுகமாகி உள்ளார் "அருவி" படத்தின் ஹீரோயினான அதிதி பாலன். பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு நேற்று வெளியாகி உள்ள அருவி படத்திற்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

அனுபவம் வாய்ந்த நடிகைகளே இப்படி ஒரு நடிப்பை நடித்திருப்பீர்களா என கேட்கும் அளவுக்கு, முதல் படத்திலேயே யாரும் ஏற்க துணியாத ஒரு கதாபாத்திரத்தில் ஏற்று துணிச்சலாக நடித்து பல இடங்களில் கைத்தட்டல்களை வாங்கியிருக்கிறார் அதிதி.

ஆண்டின் இறுதியில் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த ஒரு வியத்தகு நடிகையாக களமிறங்கியிருக்கும் அதிதி, நிச்சயம் ஒரு ரவுண்ட் வரலாம் என நம்பலாம்.

மூலக்கதை