எகிப்து செல்ல தினமலர் இணையதள வாசகருக்கு மீண்டும் வாய்ப்பு

தினமலர்  தினமலர்
எகிப்து செல்ல தினமலர் இணையதள வாசகருக்கு மீண்டும் வாய்ப்பு

தினமலர் இணையதளம் வாசகர்களுக்கு வணக்கம். "மாயவன்" சினிமா சம்பந்தமாக எகிப்திற்கு சுற்றுலா செல்வது தொடர்பாக போட்டி ஒன்று நடத்தியிருந்தோம். அந்த போட்டிக்கான நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளன.

மாயவன் படம் வெளியாகிய நிலையில், வாசகர்கள் "மாயவன்" படத்தை பார்த்துவிட்டு, அதில் உள்ள "மாயவன்" யார் என்பதை சரியாக கண்டுபிடித்து சொல்ல வேண்டும். அத்துடன், மாயவன் படத்தின் டிரைலரை பேஸ்புக்கில் ஷேர் செய்து அதை ஸ்கிரீன் ஷாட் உடன், உங்கள் பெயர், முகவரி, மொபைல் எண் ஆகியவற்றை குறிப்பிட்டு, போட்டியில் நாங்கள் குறிப்பிட்டுள்ள இ-மெயிலுக்கு அனுப்புங்கள்.

சரியான விடையளிக்கும் வாசகர்கள், தயாரிப்பாளர் முன்னிலையில் தேர்வு செய்யப்படுவர். வெற்றி பெறும் இரண்டு அதிர்ஷ்டசாலி நேயர்களுக்கு, இலவசமாக எகிப்தின் பிரமிடை காணும் வரலாற்று வாய்ப்பு காத்திருக்கிறது.

போட்டியில் பங்கேற்பவர்கள், விதிமுறைகளை கவனமாக படித்து பார்க்கவும்.

கடைசி நாள்: 18.12.2017, மாலை 4 மணிவரை மட்டுமே (இந்திய நேரப்படி)

போட்டியில் பங்கேறுங்க... வெற்றி பெறுங்க... வரலாற்று பயணத்திற்கு தயாராகுங்க...!

மூலக்கதை