அனில் கபூர் ஜோடியாக ஜூகி சாவ்லா

தினமலர்  தினமலர்
அனில் கபூர் ஜோடியாக ஜூகி சாவ்லா

நடிகர் அனில் கபூர், தன் மகள் சோனம் கபூருடன் இணைந்து, "ஏக் லட்கி கோ தேக்கா டூ அயிசா லகா" என்ற படத்தில் நடிக்கிறார். ஷெல்லி சோப்ரா இயக்க, விது வினோத் சோப்ரா தயாரிக்கிறார். இப்படத்தில் அனில் கபூர் ஜோடியாக நடிகை ஜூகி சாவ்லாவை நடிக்க அணுகினர். அவரும் சம்மதம் சொல்லிவிட்டார். படத்தில் சோனம் கபூரின் பெற்றோர்களாக அனில்-ஜூகி நடிக்க உள்ளனர். குடும்ப சென்ட்டிமென்ட் மற்றும் காமெடி நிறைந்த படமாக இருப்பதால் இப்படத்தில் நடிக்க சம்மதம் சொல்லியிருக்கிறார் ஜூகி சாவ்லா. விரைவில் இதன் படப்பிடிப்பு துவங்க உள்ளது.

மூலக்கதை