சாரதியின் அசாத்தியமான நடவடிக்கையினால் - காப்பாற்றப்பட்ட 41 பேர்களின் உயிர்கள்!!

PARIS TAMIL  PARIS TAMIL
சாரதியின் அசாத்தியமான நடவடிக்கையினால்  காப்பாற்றப்பட்ட 41 பேர்களின் உயிர்கள்!!

தீப்பற்றிய பேரூந்தில் இருந்து சாரதியின் துரித நடவடிக்கையினால் 41 பயணிகளின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. 
 
நேற்று முன் தினம் சனிக்கிழமை Pont-de-l'Arche (Eure) பிராந்தியத்தை ஊடறுக்கும் A13 நெடுஞ்சாலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீதியில் பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த பேரூந்து திடீரென அதன் பின் பகுதியில் தீப்பிடித்து எரிந்துள்ளது. பேரூந்தின் முன் பகுதியில் சமிக்ஞை விளக்கு எச்சரிக்கை ஒலி எழுப்ப, சாரதி கண்ணாடி வழியே பேரூந்தின் பின் பகுதியில் பார்த்துள்ளார். பேரூந்தின் பின் பகுதியில் இருந்து புகை புறப்பட, சாரதி துரிதமாக செயற்பட்டார். பேரூந்தை நிறுத்திவிட்டு, எவ்வித பதட்டமுமின்றி, அனைத்து பயணிகளையும் வெளியே வரச்செல்லி அழைத்தார். 
 
பேரூந்துக்குள் எவ்வித பதட்டமான சூழ்நிலையும் ஏற்படாமல், இரண்டு சிறுவர்கள் 17 ஆண்கள், 22 பெண்கள் என மொத்தமாக 41 பேர் பேரூந்தை விட்டு இறங்கியது, பேரூந்து மிக வேகமாக எரிந்துள்ளது. பயணிகள் அனைவரும் எவ்வித காயங்களும் இன்றி காப்பாற்றப்பட்டனர். தீயணைப்பு படையினர் வந்து தீயணை அணைத்தனர். பின்னர் அவர்கள் சாரதியின் துரித நடவடிக்கையால் அனைவரும் காப்பாற்றப்பட்டளமையை குறிப்பிட்டு பாராட்டினார்கள்.

மூலக்கதை