தரம் இல்லா உணவுகளை வழங்கிய 16 கேட்டரிங் சேவை வழங்குநரின் ஒப்பந்தத்தினை ரத்து செய்த ரயில்வேஸ்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தரம் இல்லா உணவுகளை வழங்கிய 16 கேட்டரிங் சேவை வழங்குநரின் ஒப்பந்தத்தினை ரத்து செய்த ரயில்வேஸ்!

2017-2018 நிதி ஆண்டில் ரயில்களில் தரம் இல்லாமல் உணவு வழங்கிது, அதிகத் தொகை வசூலித்தது போன்ற காரணங்களுக்காக 16 கேட்டரிங் சேவை வழங்குநரின் உரிமத்தினை இந்தியன் ரயிவேஸ் இரத்து செய்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2017-2018 நிதி ஆண்டில் ரயில் பயணங்களின் போது டாய்லெட் நீரினை கலந்து டீ, காபி விற்கப்பட்டதாகச் சமுக வலைத்தளங்களில் வீடியோ வெளியாகிப் பரபரப்பினை ஏற்படுத்தியிருந்தது.

மூலக்கதை