மீண்டும் ஆர்யா - சந்தோஷ் - ஞானவேல் கூட்டணி

தினமலர்  தினமலர்
மீண்டும் ஆர்யா  சந்தோஷ்  ஞானவேல் கூட்டணி

'ஹர ஹர மஹாதேவகி' மற்றும் 'இருட்டு அறையில் முரட்டு குத்து' ஆகிய ஆபாசப் படங்களைத் தொடர்ந்து சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கியிருக்கும் படம் கஜினிகாந்த். தெலுங்கு ரீமேக்கான இந்தப்படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிக்கிறார்.

சாயிஷா சைகல் கதாநாயகியாக நடித்துள்ள இந்தப்படத்தில் கருணாகரன், சதீஷ் ஆகிய இரண்டு காமெடியன்களும் நடிக்கின்றனர். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்திருக்கும் 'கஜினிகாந்த்' படத்தை ஜூலை 27 அன்று வெளியிட திட்டமிட்டனர். அதே தேதியில் ஜுங்கா படம் வெளிவருவதால் 'கஜினிகாந்த்' படத்தை தள்ளி வைத்துவிட்டனர்.

இதற்கிடையில் கஜினிகாந்த்' படத்தைத் தொடர்ந்து மீண்டும் சந்தோஷ் - ஆர்யாவை வைத்து ஒரு படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது.

படத்திற்கு அட்வான்சாக சில லட்சங்களை பெற்று கொண்டு படம் வெளியான பிறகு லாபத்தில் பங்கு என்ற அடிப்படையில் 'கஜினிகாந்த்' படத்தில் நடித்திருக்கிறார் ஆர்யா. இந்த அடிப்படையிலேயே அடுத்தப் படத்திற்கும் ஆர்யாவை ஒப்பந்தம் செய்துள்ளது ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் என தகவல் வெளியாகி உள்ளது.

மூலக்கதை