ஆசிய விளையாட்டு போட்டி தமிழக வீரர் தலைமையில் இந்திய கைப்பந்து அணி

தினகரன்  தினகரன்
ஆசிய விளையாட்டு போட்டி தமிழக வீரர் தலைமையில் இந்திய கைப்பந்து அணி

சென்னை: இந்தோனேசியாவில் நடைபெற உள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய கைப்பந்து அணியின் கேப்டனாக தமிழக வீரர் உக்கரபாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார்.இந்தோனேசியா தலைநகர் ஜகார்தாவில் 18வது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன (ஆக.19 - 27). இந்த தொடருக்கான இந்திய ஆண்கள் மற்றும் மகளிர் கைப்பந்து அணிகளை  இந்திய கைப்பந்து கூட்டமைப்பு பொதுச் செயலாளர் ராமவதார் சிங் ஜாக்கர் அறிவித்துள்ளார்.ஆண்கள் அணிக்கு  தமிழக வீரர் உக்கரபாண்டியன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். எஸ்.பிரபாகரன், பி.பிரபாகரன் (இந்தியன் ரயில்வே), அசோக் கார்த்திக் (கர்நாடகா) உட்பட 14 பேர் இடம் பெற்றுள்ளனர்.மினிமோள் ஆபரகாம் தலைமையிலான பெண்கள் அணியிலும் மொத்தம் 14 பேர் இடம் பெற்றுள்ளனர். ஆசியப் போட்டியில் பங்கேற்கும் இந்திய கைப்பந்து அணிகளுக்கான பயிற்சி முகாம்  பாட்டியாலா, பெங்களூர் ஆகிய இடங்களில் நடத்தப்படும்.

மூலக்கதை