வங்கதேச இறக்குமதி ஜவுளி துறை பாதிப்பு

தினமலர்  தினமலர்
வங்கதேச இறக்குமதி ஜவுளி துறை பாதிப்பு

சோமனுார் : வங்­க­தே­சம் வழி­யாக வெளி­நாட்டு துணி அதி­க­ள­வில் இறக்­கு­மதி செய்­யப்­ப­டு­வ­தால், இந்­திய ஜவுளி உற்­பத்தி பாதிப்­ப­டைந்­துள்­ள­தாக விசைத்­தறி உரி­மை­யா­ளர்­கள் தெரி­வித்­த­னர்.

நாட்­டில், 24 லட்­சம் விசைத்­த­றி­கள் இயங்கி வரு­கின்றன. தமி­ழ­கத்­தில், ஆறு லட்­ச­மும்; அதில் கோவை, திருப்­பூர் மாவட்­டத்­தில், இரண்டு லட்­சத்­துக்­கும் அதி­க­மான விசைத்­த­றி­களும் இயங்கி வரு­கின்றன. இந்­நி­லை­யில், வெளி­நாட்டு துணி இறக்­கு­ம­தி­யால் விசைத்­தறி தொழில் முடங்­கி­யுள்­ள­தாக, உரி­மை­யா­ளர்­கள் கவலை தெரி­விக்­கின்­ற­னர்.

கோவை – திருப்­பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்­யும் விசைத்­தறி உரி­மை­யா­ளர் சங்க தலை­வர் பழ­னி­சாமி கூறி­ய­தா­வது: நெசவு தொழில் வீழ்ச்­சி­யால், கோவை மாவட்­டத்­தில் மட்­டும் 1,000க்கும் மேற்­பட்ட விசைத்­த­றி­கள் இயங்­கா­மல் உள்ளன. கடந்த நான்கு ஆண்­டு­க­ளாக, ஜவுளி துறை­யி­ன­ரும் ஒப்­பந்­தப்­படி ஊதி­யம் வழங்­க­வில்லை. இத­னால், இதையே நம்பி உள்ள விசைத்­தறி உரி­மை­யா­ளர்­கள், தொழி­லா­ளர்­களின் குடும்­பங்­கள் கடு­மை­யாக பாதிக்­கப்­பட்­டுள்ளன.

கடந்த இரண்டு ஆண்­டு­க­ளாக, ஆப்­ரிக்க நாடு­க­ளுக்கு துணி ஏற்­று­மதி செய்­யப்­ப­டு­வ­தில்லை. அதே­ச­ம­யம், வங்­க­தே­சம் வழி­யாக மற்ற வெளி­நாட்டு துணி, வரி ஏதும் விதிக்­கப்­ப­டா­மல் அதி­க­ள­வில் இந்­திய சந்­தை­யில் குவிக்­கப்­பட்டு வரு­கிறது. இது போன்ற கார­ணங்­க­ளால் தான், இந்­திய துணி உற்­பத்தி முழு­வ­து­மாக பாதிப்­ப­டைந்­துள்­ளது. எனவே, வெளி­நாட்டு துணி இறக்­கு­ம­தியை கட்­டுப்­ப­டுத்தி, இந்­திய ஜவுளி ஏற்­று­ம­தியை அதி­க­ரிக்க நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும். இவ்­வாறு அவர் கூறி­னார்.

மூலக்கதை