ஸ்டெர்லைட் ஆலை; ரூ.690 கோடி இழப்பு

தினமலர்  தினமலர்
ஸ்டெர்லைட் ஆலை; ரூ.690 கோடி இழப்பு

புது­டில்லி : ‘‘துாத்துக்­குடி ஸ்டெர்­லைட் ஆலை மூடப்­பட்­ட­தால், ஓராண்­டில், 690 கோடி ரூபாய் இழப்பு ஏற்­படும்,’’ என, வேதாந்தா குழும தலை­வர், அனில் அகர்­வால் தெரி­வித்­துள்­ளார்.

சுற்­றுச்­சூ­ழல் மாசு­பாட்டை கண்­டித்து, துாத்துக்­குடி ஸ்டெர்­லைட் ஆலைக்கு எதி­ரான ஆர்ப்­பாட்­டத்­தில், போலீஸ் துப்­பாக்­கிச் சூட்­டில், ௧3 பேர் இறந்­த­னர். இதை­ய­டுத்து, தமி­ழக அரசு உத்­த­ர­வின்­படி ஸ்டெர்­லைட் ஆலை மூடப்­பட்­டது. இதை எதிர்த்து, தேசிய பசுமை தீர்ப்­பா­யத்­தில், வேதாந்தா குழு­மம் மனு தாக்­கல் செய்­துள்­ளது.

இந்­நி­லை­யில், அனில் அகர்­வால், தனி­யார், ‘டிவி’க்கு அளித்த பேட்டி: வேதாந்தா குழும நிறு­வ­னங்­களின் விற்­று­மு­த­லில், துாத்துக்­குடி ஸ்டெர்­லைட் ஆலை­யின் பங்கு, 2 சத­வீ­த­மா­கும். ஆலை, ஓராண்டு மூடப்­பட்­டால், 690 கோடி ரூபாய் இழப்பு ஏற்­படும். இப்­பி­ரச்­னைக்கு நல்ல தீர்வு வரும் என, நம்­பு­கி­றேன். எத்­த­கைய முடி­வும் ஏற்­றுக் கொள்­ளப்­படும்.

இந்­தி­யா­வின் கச்சா எண்­ணெய் உற்­பத்­தி­யில், குழு­மத்­தின் பங்கு, 30 சத­வீ­த­மாக உள்­ளது. இதை, 50 சத­வீ­த­மாக உயர்த்த, இலக்கு நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளது. இவ்­வாறு அவர் கூறி­னார். வேதாந்தா குழு­மம், கச்சா எண்­ணெய், சுரங்கம், உலோ­கம், தாது பொருட்­கள் உள்­ளிட்ட பல்­வேறு தொழில்­களில் ஈடு­பட்­டுள்­ளது.

மூலக்கதை