‘அமெரிக்காவால் முதலீடுகள் வெளியேறும் அபாயம்’

தினமலர்  தினமலர்
‘அமெரிக்காவால் முதலீடுகள் வெளியேறும் அபாயம்’

புதுடில்லி : ‘அமெ­ரிக்­கா­வில் வட்டி விகி­தம் உயர்ந்­துள்­ள­தால், இந்­தி­யா­வில் இருந்து அன்­னிய முத­லீ­டு­கள் வெளி­யே­றும்’ என, தர நிர்­ணய நிறு­வ­ன­மான, ‘எஸ் அண்டு பி குளோ­பல் ரேட்­டிங்ஸ்’ தெரி­வித்­துள்­ளது.

இந்­நி­று­வ­னத்­தின், ஆசிய – பசி­பிக் பிராந்­திய பொரு­ளா­தார அறிக்­கை­யில் கூறப்­பட்­டு உள்­ள­தா­வது: இந்­தி­யா­வின் பொரு­ளா­தார புள்­ளி­வி­ப­ரம் நன்கு உள்­ளது. முக்­கிய துறை­களின் வளர்ச்சி குறி­யீடு, 50 புள்­ளி­க­ளுக்கு மேல் இருப்­பது சாத­க­மான அம்­ச­மா­கும். சமீப வாரங்­க­ளாக, அமெ­ரிக்க டால­ருக்கு நிக­ரான ரூபாய் மதிப்­பும் ஸ்தி­ர­மாக உள்­ளது.

வங்­கி­களின் கடன் வளர்ச்சி அதி­க­ரித்­துள்­ளது; உள்­நாட்டு வர்த்­த­கச் சூழ­லும் மேம்­பட்­டுள்­ளது. இவை­யெல்­லாம், நாட்­டின் பொரு­ளா­தா­ரம் வலு­வ­டைந்து வரு­வதை குறிக்­கின்றன.

மிதமான பாதிப்பு :
இருந்­த­போ­தி­லும், அமெ­ரிக்­கா­வில் வட்டி விகி­தம் அதி­க­ரித்து வரு­வ­தன் எதி­ரொ­லி­யாக, அன்­னிய முத­லீ­டு­கள் வெளி­யே­றக்­கூ­டும். எனி­னும், இது மித­மான பாதிப்­பையே ஏற்­ப­டுத்­தும். அமெ­ரிக்கா, 2013ல், பொரு­ளா­தார ஊக்­கு­விப்பு நட­வ­டிக்­கை­களை குறைப்­ப­தாக அறி­வித்த போது, சர்­வ­தேச சந்­தை­கள் சந்­தித்த தாக்­கம் போல இருக்­காது.

அமெ­ரிக்கா – சீனா ஆகி­யவை, இறக்­கு­மதி வரியை பரஸ்­ப­ரம் உயர்த்தி வரு­கின்றன. ஐரோப்­பிய கூட்­ட­மைப்­பும், அமெ­ரிக்­கா­வுக்கு பதி­லடி கொடுத்­துள்­ள­தால், சர்­வ­தேச வர்த்­த­கத்­தில் பதற்­ற­மான சூழல் உரு­வா­கி­யுள்­ளது. இது, இந்­தியா உட்­பட, ஆசிய பசி­பிக் பிராந்­திய நாடு­களின் பொரு­ளா­தார வளர்ச்­சிக்கு இடை­யூ­றாக இருக்­கும். அத­னால், வளர்ச்சி விகி­தம் குறை­யும்; அத்­து­டன், நுகர்­வோர் நல­னும் பாதிக்­கப்­படும். இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

வட்டி விகிதம் உயர்வு :
அமெ­ரிக்­கா­வில், 2008ல் பொரு­ளா­தார மந்­த­நிலை ஏற்­பட்­டது. அத­னால், வர­லாறு காணாத வகை­யில் வட்டி விகி­தம் குறைந்­தது. அதன் பின், பொரு­ளா­தார வளர்ச்­சிக்­கான அறி­கு­றி­கள் தோன்­றி­யதை அடுத்து, 2015 டிசம்­ப­ரில், அமெ­ரிக்க மத்­திய வங்கி, வட்டி விகி­தத்தை உயர்த்­தி­யது. கடந்த, 2017 ஜன­வரி முதல், ஐந்து முறை வட்டி விகி­தம் உயர்த்­தப்­பட்­டுள்­ளது.

மூலக்கதை