மோகன்லாலின் லூசிபர் பர்ஸ்ட்லுக் வெளியீடு

தினமலர்  தினமலர்
மோகன்லாலின் லூசிபர் பர்ஸ்ட்லுக் வெளியீடு

மலையாள சினிமாவை பொறுத்தவரை தற்போது ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் படங்கள் இரண்டு.. ஒன்று மோகன்லால் நடிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ள ஒடியன். இன்னொன்று அதே மோகன்லால் நடிப்பில் உருவாக உள்ள லூசிஃபர். இந்தப்படத்தின் மூலம் நடிகர் பிருத்விராஜ் இயக்குனராக அறிமுகமாகிறார் என்பதுதான் படத்தின் எதிர்பார்ப்பை இருமடங்கு அதிகமாகியிருக்கிறது..

தற்போது இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார் பிருத்விராஜ். இதில் மோகன்லாலின் கெட்டப் கிட்டத்தட்ட ஜில்லா படத்தில் பார்த்த அவரது தோற்றம் போலவே இருக்கிறது.

இந்தப்படத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் நடிக்கிறார். மோகன்லாலின் தம்பியாக டொவினோ தாமஸ் மற்றும் முக்கிய வேடத்தில் பிருத்விராஜின் சகோதரரரான இந்திரஜித் ஆகியோர் நடிக்கின்றனர். கதாநாயகியாக மஞ்சு வாரியார் நடிக்கின்றார்.

மூலக்கதை