எனை நோக்கி பாயும் தோட்ட புதிய லோகோ வெளியீடு

தினமலர்  தினமலர்
எனை நோக்கி பாயும் தோட்ட புதிய லோகோ வெளியீடு

கவுதம் மேனன் இயக்கத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்து வரும் படம் எனை நோக்கி பாயும் தோட்டா. தனுஷ் ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். தர்புகா சிவா இசையமைக்கிறார். வேந்தர் மூவிஸ் மதனும், கவுதம் மேனனும் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படம் நீண்டகாலமாக நடந்து வருகின்றன.

எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு துவங்கி உள்ளது. ஜூலை 20-ம் தேதி படத்தின் புதிய லோகோ வெளியாகும் என கவுதம் மேனன் கூறியிருந்தார்.

இதையடுத்து, தற்போது மூன்று புதிய லோகோவுடன் கூடிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதில், துப்பாக்கி தோட்டாவில் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் டைட்டிலை வெளியிட்டுள்ளனர்.

மூலக்கதை