பரிஸ் - இன்று முதல் சேவைக்கு வரும் மின்சார ஸ்கூட்டர்கள்! - கட்டண விபரங்கள்!!

PARIS TAMIL  PARIS TAMIL
பரிஸ்  இன்று முதல் சேவைக்கு வரும் மின்சார ஸ்கூட்டர்கள்!  கட்டண விபரங்கள்!!

கடந்த ஆறுமாத கால velíb சேவைகளின் தடைக்கு பின்னர் தற்போது புதிய நிறுவனம் ஒன்று, நின்றுகொண்டே பயணிக்கக்கூடிய மின்சார ஸ்கூட்டர்களை வாடகைக்கு விட்டுள்ளது. முதல்கட்டமாக குறைந்த அளவி எண்ணிக்கையிலேயே இது கிடைத்தாலும், விரைவில் முழு நீள சேவையாக இது மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அமெரிக்க நிறுவனமான Lime நிறுவனம் இந்த ஸ்கூட்டர்களை வாடகைக்கு விட்டுள்ளது. இன்று 1 ஆம் மற்றும் 6 ஆம் வட்டாரங்களில் மாத்திரமே இந்த சேவை கிடைக்கும் என்றபோதும் விரைவில் பரிஸ் முழுவதும் இச்சேவை கிடைக்கும் என நிறுவனத்தினர் குறிப்பிட்டுள்ளனர். அவர்களுடைய செயலியை (App) உங்கள் திறன்பேசியில் நிறுவுவதன் மூலம் இந்த சேவையை நீங்கள் அடையலாம். QR குறியீட்டை ஸ்கேன் செய்வது மூலம் ஸ்கூட்டர்களை இயக்கன்முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஒரு மணிநேரத்துக்கு 24 கிலோமீட்டர்கள் வேகத்தில் இது பயணிக்கும். ஆரம்பத்தில் 1 யூரோக்கள் செலுத்திவிட்டு, பின்னர் ஒவ்வொரு நிமிடங்களுக்கு 15 சதம் என்ற கணக்கில் நீங்கள் செலுத்தவேண்டும். சாதாரணமாக ஒரு நபரின் பயன்பாட்டுக்கு இரண்டில் இருந்து மூன்று யூரோக்கள் வரை கட்டணம் செலவு செய்தால் போதுமானது எனவும் நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
தவிர, துரித கதியில் 10 ஆம் மற்றும் 11 ஆம் வட்டாரங்களில் இந்த சேவைகளுக்கான பணிகளில் ஈடுபட்டு வரும் குறித்த Lime நிறுவனத்தினர் இரண்டொரு நாட்களில் சேவைக்கு வரும் எனவும் உறுதியளித்துள்ளனர். 

மூலக்கதை