பயங்கரவாத தடையம்! - கட்டில் மெத்தைக்கு அடியில் ஆயுதங்கள்! - சுற்றிவளைத்த காவல்துறையினர்!!

PARIS TAMIL  PARIS TAMIL
பயங்கரவாத தடையம்!  கட்டில் மெத்தைக்கு அடியில் ஆயுதங்கள்!  சுற்றிவளைத்த காவல்துறையினர்!!

அடுக்குமாடி குடியியிருப்பு ஒன்றில் உள்ள வீட்டில் இருந்து ஆயுதங்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர். பயங்கரவாத தடையங்களும் சிக்கியுள்ளதாக அறியமுடிகிறது. 
 
 Salon-de-Provence (Bouches-du-Rhone) பகுதியில் உள்ள குடியிருப்பு வளாகத்தில் இருந்தே ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளது. வாடகைக்கு வீடு பெற்றுக்கொண்ட இஸ்லாமிய நபர்கள் தங்கியிருந்த அறை முற்றாக சோதனையிடப்பட்டுள்ளது. சில இஸ்லாமிய புத்தகங்களும், குர்ரான் புத்தகங்களும், மேலும் சில அரபு வாசகங்கள் கொண்ட தாள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இவை தவிர, கட்டில் மெத்தையின் கீழ் ரைபிள் வரை துப்பாக்கியும், M16 வகை ரைபிள் துப்பாக்கியும், ஒரு ஆர் துப்பாக்கி, மற்றும் ஒரு கைத்துப்பாக்கியும் மீட்கப்பட்டுள்ளது. 
 
தவிர, குர்ரான் புத்தகத்துக்குள் €4,000 ரொக்கப்பணமும் மீட்கட்டுள்ளது. காவல்துறையினர் உள் நுழைந்தபோது யாரும் இருந்திருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணைகளை பயங்கரவாத தடுப்புப்பிரிவினர் எடுத்துக்கொண்டுள்ளனர்.

மூலக்கதை