பெண்களின் பெயர்களில் மாற்றப்படும் மெற்றோ நிலையங்கள்!!

PARIS TAMIL  PARIS TAMIL
பெண்களின் பெயர்களில் மாற்றப்படும் மெற்றோ நிலையங்கள்!!

நான்காம் இலக்க வழியின் இரண்டு புதிய மெற்றோ நிலையங்களுக்கு சதனைப்பெண்களின் பெயர்கள் சூட்டப்பட உள்ளது. 
 
நான்காம் வழி இலக்க மெற்றோ விஸ்தரிப்பு பணிகள் தற்போது இடம்பெற்று வரும் நிலையில், Bagneux மற்றும் Montrouge ஆகிய நகரங்களில் புதிய நிலையங்கள் அமைக்கும் பணி இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையங்களுக்கு Lucie Aubrac மற்றும்  Barbara ஆகிய இரு பெண்களின் பெயர்கள் சூட்டப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இரு பெயர்களையும், இணையத்தளம் ஊடாக எடுக்கப்பட்டிருந்த கணக்கெடுப்பில் 30,000 பெண்கள் வாக்களித்து தெரிவு செய்துள்ளனர். 
 
இந்த புதிய நிலைய விஸ்தரிப்பானது தினமும் 41,000 பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் எனவும், 2021 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் குறித்த நிலையங்கள் திறக்கப்பட்டு சேவைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை