80கி.மீ வேகக்கட்டுப்பாடு - 11,000 புதிய பதாகைகள் - குற்றப்பணம் - மேலதிக விபரங்கள்..!!

PARIS TAMIL  PARIS TAMIL
80கி.மீ வேகக்கட்டுப்பாடு  11,000 புதிய பதாகைகள்  குற்றப்பணம்  மேலதிக விபரங்கள்..!!

வரும் ஜூலை 1 முதல், நாடு முழுவதும் உள்ள இரண்டாம் கட்ட வீதிகளில், புதிய வேகக்கட்டுப்பாடு விதிக்கப்பட உள்ளது. பல்வேறு தரப்பினரின் எதிர்ப்புக்கு மத்தியில் அரசு இந்த புதிய நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. 
 
மொத்த சாலைகளின் தூரம் 400,000 கிலோமீட்டர்கள். மணிக்கு 90 கி.மீ அதிகபட்ச வேகம் என இருந்த வேகத்தை குறித்து, தற்போது மணிக்கு 80 கி.மீ வேகம் என மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆறு மாதங்களுக்கு முன்னரே அரசு இது தொடர்பாக அறிவித்திருந்தது. அப்போதிலிருந்தே இதற்கு எதிர்ப்புக்கள் வலுத்துள்ளன. குறிப்பாக உந்துருளி சாரதிகளும், அமைப்பினரும் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொண்டிருந்தனர். இந்நிலையில், அரசு மிக தீர்க்கமாக ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வரும் என அறிவித்துள்ளது. 
 
இதனால், வேக கட்டுப்பாடு மணிக்கு 80 கி.மீ எனும் புதிய பதாதைகளை நிர்மாணிக்கும் பணியினை அரசு மேற்கொண்டு வருகின்றது. மொத்தமாக 11,000 பாதாதைகள் நிறுவப்பட உள்ளன. இதனால் அரசுக்கு 6 தொடக்கம் 12 மில்லியன் யூரோக்கள் வரை செலவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர,  இந்த வேகத்தை மீறுவோருக்கு 80 யூரோக்களில் இருந்து 120 மற்றும் 200 யூரோக்கள் வரையான குற்றப்பணம் அறவிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மூலக்கதை