அஜித்-விஜய்-சூர்யா மோதல்; யாரை நீக்குவார் சங்கத் தலைவர் விஷால்.?

FILMI STREET  FILMI STREET
அஜித்விஜய்சூர்யா மோதல்; யாரை நீக்குவார் சங்கத் தலைவர் விஷால்.?

கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் (2018) ஆகிய இரண்டு மாதங்களில் தமிழகத்தில் எந்த புதிய தமிழ் படமும் வெளியாகவில்லை.

விஷால் தலைமையிலான இந்த போராட்டத்திற்கு ஒட்டு மொத்த தயாரிப்பாளர்கள் சங்கம் ஆதரவை தெரிவித்து இருந்தது.

அப்போது சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி வாரத்திற்கு அதிகபட்சமாக 4 படங்களை மட்டுமே ரிலீஸ் செய்ய வேண்டும் எனவும் அதுவும் பெரிய நடிகர்களின் படங்கள் என்றால் 1 அல்லது 2 படங்களை மட்டுமே ரிலீஸ் செய்வதாக கூறப்பட்டது.

மேலும் ரிலீஸ் தேதியை தயாரிப்பாளர்கள் சங்கமே முடிவு செய்து கடிதம் கொடுக்கும். அதன்பின்னரே தேதியை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

காரணம் தமிழகத்தில் 1100 தியேட்டர்களே இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு அஜித் நடித்து வரும் விஸ்வாசம், விஜய் நடித்துவரும் தளபதி 62, சூர்யா நடித்து வரும் என்ஜிகே ஆகியோரின் படங்கள் வெளியாகும் எனத் தெரிகிறது.

இத்துடன் விஷால் நடித்துவரும் சண்டக்கோழி 2 படமும் வெளியாகும் எனத் தெரிகிறது.

நிச்சயம் இத்தனை படங்கள் வெளியானால், குறைந்தபட்ச தியேட்டரே கிடைக்கும்.

இதனால் எந்த பட தயாரிப்பாளருக்கு தீபாவளி ரிலீஸ் தேதியை குறிப்பிட்டு விஷால் கடிதம் கொடுப்பார்? என்ற கேள்வி கோலிவுட்டில் எழுந்துள்ளது.

நிச்சயம் ஒரு ஹீரோவின் படத்தை நீக்கினால் மட்டுமே அடுத்த ஹீரோவுக்கு அதிகபட்ச தியேட்டர் கிடைக்கும். எனவே விஷால் என்ன முடிவு எடுப்பார்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

What will be Vishals decision on Vijay Ajith Suriya Clash on 2018 Diwali

மூலக்கதை