மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் தடுமாறும் இலங்கை!

PARIS TAMIL  PARIS TAMIL
மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் தடுமாறும் இலங்கை!

போர்ட் ஆப் ஸ்பெயின் நகரில் நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 131 ரன்களை எடுத்துள்ளது. 

 
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இலங்கை அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி சமீபத்தில் தொடங்கியது.
 
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஜேசன் ஹோல்டர் பேட்டிங் தேர்வு செய்தார். அந்த அணியில் பாவெல் 38 ரன்களும், ஷாய் ஹோப் 44 ரன்களும், ரோஸ்டன் செஸ் 38 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் ஜேசன் ஹோல்டர் 40 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 84 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 246 ரன்கள் எடுத்துள்ளது. ஷேன் டாவ்ரிச் 46 ரன்களுடனும், தேவேந்திர பிஷு ரன் எதுவும் எடுக்காமல் களத்தில் உள்ளனர்.
 
இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஷேன் டாவ்ரிச் பொறுப்பாக சதமடித்து அசத்தினார். அவரை தவிர மற்றவர்கள் நிலைக்காததால், வெஸ்ட் இண்டீஸ் அணி 154 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 414 ரன்கள் எடுத்து ஆட்டத்தை முடித்துக் கொள்வதாக தெரிவித்தது. டாவ்ரிச் 125 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தார்.
 
இலங்கை அணி தரப்பில் லஹிரு குமாரா 4 விக்கெட் வீழ்த்தினார். சுரங்க லக்மால் 2 விக்கெட்டும், ரங்கனா ஹெராத் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
 
இதைத்தொடர்ந்து, இலங்கை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் விரைவில் அவுட்டாக, இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 10 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 31 ரன்கள் எடுத்துள்ளது.  
 
மூன்றாம் நாள் ஆட்டத்தில் தினேஷ் சண்டிமால் 44 ரன்களும், நிரோஷன் டிக்வெலா 30 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் விரைவில் அவுட்டாகினர். இதனால் இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் 55.4 ஓவரில் 185 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
 
வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் கம்மின்ஸ் 3 விக்கெட்டும், கீமர் ரோச், காப்ரியல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், ஜேசன் ஹோல்டர், தேவேந்திர பிஷு ஆகியோர் தலா ஒரு  விக்கெட் எடுத்தனர்.
 
இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. கேத் பிராத்வைட், டேவன் ஸ்மித் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். பிராத்வைட் 16 ரன்னிலும், ஸ்மித் 20 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து இறங்கிய கிரன் பாவெல் பொறுப்பாக ஆடி அரை சதமடித்தார்.
 
மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 40 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்துள்ளது. பாவெல் 64 ரன்களுடனும், ஷேன் டாவ்ரிச் 11 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
 
இலங்கை அணி தரப்பில் லஹிரு குமாரா 2 விக்கெட்டும், சுரங்க லக்மா, ரங்கனா ஹெராத் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். தற்போதைய நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கை அணியை விட 360 ரன்கள் கூடுதலாக பெற்றுள்ளது. #WIvSL #FirstTest

மூலக்கதை