‘இ – வே பில்’ விலக்கு கோரும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள்

தினமலர்  தினமலர்
‘இ – வே பில்’ விலக்கு கோரும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள்

‘இன்­ஜி­னி­ய­ரிங்’ தொழில் தொடர்­பான பொருள்­களை, மாநி­லத்­துக்­குள் கொண்டு செல்­லும்­போது, ‘இ–வே பில்’ விதிக்க கூடாது’ என, சிறு, குறு, தொழில் நிறு­வ­னங்­கள் சார்­பில் கோரிக்கை வைக்­கப்­பட்­டுள்­ளன. இது குறித்து, சிறு, குறு தொழில் நிறு­வ­னங்­க­ளுக்­கான சங்க தலை­வர், பாபு மற்­றும் பொதுச் செய­லர் மோகன் கூறி­ய­தா­வது: மாநி­லங்­க­ளுக்­கி­டையே பொருள்­களை கொண்டு செல்ல, இ – வே பில் பெறும் முறையை நாங்­கள் வர­வேற்­கி­றோம். ஆனால், மாநி­லத்­துக்­குள் பொருள்­களை கொண்டு செல்ல, இ – வே பில் பெற வேண்­டும் என்ற முறை, எங்­க­ளைப் போன்ற சிறிய நிறு­வ­னங்­களை மிக­வும் பாதிக்­கும். எங்­க­ளது, இன்­ஜி­னி­ய­ரிங் தொழில் என்­பது, ஒரே நேரத்­தில் ஒரு பொருளை உற்­பத்தி செய்து முடிப்­பது இல்லை. ஒவ்­வொரு நிலைக்­கும், ஒவ்­வொரு பகு­திக்கும் கரு­வி­களை எடுத்­துச் செல்ல வேண்­டும்.அதற்கு, ஒவ்­வொரு முறை­யும், எங்­க­ளால் இ – வே பில் பெற முடி­யாது. எங்­க­ளைப் போன்ற சிறிய நிறு­வ­னங்­களில், கணினி வசதி கூட கிடை­யாது. எவ்­வாறு இ – வே பில் எடுக்க வேண்­டும் என்­பது குறித்­தும், எங்­க­ளுக்கு பயிற்சி அளிக்­கப்­ப­ட­வில்லை.உற்­பத்தி செய்து, முழு­மை­ய­டைந்த பொருள்­களை, எடுத்­துச் செல்ல இ – வே பில் பெற அனு­ம­திக்­க­லாம். ஆனால், இன்­ஜி­னி­ய­ரிங் தொழி­லில் ஈடு­பட்­டுள்ள, சிறு, குறு, தொழில் நிறு­வ­னங்­கள் இ – வே பில் பெறு­வ­தி­லி­ருந்து விலக்கு அளிக்க வேண்­டும்.இவ்­வாறு அவர்­கள் கூறி­னர்.வணிக வரி துறை அதி­கா­ரி­கள் கூறி­ய­தா­வது:மாநி­லத்­துக்­குள், 50 ஆயி­ரம் ரூபாய்க்கு மேல் கொண்டு செல்­லப்­படும் பொருள்­க­ளுக்கு மட்­டுமே, இ – வே பில் விதிக்­கப்­படும். சிறு, குறு தொழில் நிறு­வ­னங்­கள், 50 ஆயி­ரத்­துக்கு மேல் பொருள்­களை எடுத்­துச் செல்ல வாய்ப்பு குறைவு தான். ஆனால், 50 ஆயி­ரம் ரூபாய்க்கு மேல் பொருள்­கள் கொண்டு சென்­றால் கண்­டிப்­பாக இ – வே பில் பெற வேண்­டும்.இவ்­வாறு அவர்­கள் கூறி­னர்.
– நமது நிரு­பர் –

மூலக்கதை