‘இன்டர்நெட் லேண்ட்லைன்’ சேவை; அறிமுகப்படுத்துகிறது பி.எஸ்.என்.எல்.,

தினமலர்  தினமலர்
‘இன்டர்நெட் லேண்ட்லைன்’ சேவை; அறிமுகப்படுத்துகிறது பி.எஸ்.என்.எல்.,

இந்­தி­யா­வில், இன்­டர்­நெட் தொலை­பே­சியை, பி.எஸ்.என்.எல்., விரை­வில் அறி­மு­கப்­ப­டுத்த உள்­ளது என, அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

இது குறித்து, பி.எஸ்.என்.எல்., அதி­கா­ரி­கள் கூறி­ய­தா­வது: இந்­தி­யா­வில், ‘இன்­டர்­நெட் லேண்ட்­லைன்’ சேவைக்கு, இது­வரை அனு­மதி இல்லை. தற்­போது, முதல் முறை­யாக, பி.எஸ்.என்.எல்., இந்த சேவையை துவங்க உள்­ளது. இதற்கு, மத்­திய அரசு அனு­மதி அளித்­துள்­ளது. இந்த சேவை துவங்­கு­வ­தற்­கான பணி­கள் நடந்து வரு­கின்­றன.

இதை தவிர, பல்­வேறு சேவை­களை துவங்க, பி.எஸ்.என்.எல்., திட்­ட­மிட்­டுள்­ளது. குறிப்­பாக, ‘எம் டூ எம்’ என்ற சிம் கார்டு சேவை நடை­மு­றைக்கு வர உள்­ளது. ‘மெஷின் டூ மெஷின்’ என்ற இந்த சேவை­யில், குறிப்­பிட்ட பொரு­ளில், பி.எஸ்.என்.எல்., சிம் கார்டு பொருத்­து­வ­தன் மூலம், மனித குறுக்­கீடு இல்­லா­மல், ‘ரிமோட்’ மூலம் அவற்றை இயக்க முடி­யும்.

இந்த சிம் கார்டை காரில் பொருத்­தி­னால், அதன் செயல்­பா­டு­கள், அந்த கார் எங்கே உள்­ளது போன்ற பல்­வேறு தக­வல்­களை பெற முடி­யும். ஏற்­க­னவே இந்த சிம் பரி­சோ­த­னை­யில் உள்­ளது; விரை­வில் நடை­மு­றைக்கு வரும். இவ்­வாறு அவர்­கள் கூறி­னர்.

– நமது நிரு­பர் –

மூலக்கதை