ஜிவி.பிரகாஷ்க்கு ஜோடியான அபர்ணதி

தினமலர்  தினமலர்
ஜிவி.பிரகாஷ்க்கு ஜோடியான அபர்ணதி

அங்காடித்தெரு, வெயில், அரவான், காவியத்தலைவன் படங்களை இயக்கிய வசந்தபாலன், அடுத்து ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார்.

ஜி.வி.பிரகாஷ் உடன் 'பள்ளிப்பருவத்திலே' நாயகன் நந்தன் ராம், 'பசங்க' நாயகன் பாண்டி, ஆர்யாவுடன் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமான அபர்ணதி கதாநாயகியாக நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் ராதிகா நடிக்கிறார். இவர்களுடன் ஜெனிபர், மணிமேகலை, பாகுபலி வில்லன் பிரபாகர் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

ஜிவி.பிரகாஷ் இசையமைக்க, கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்கிறார். கிரிகேஷ் சினி கிரியேஷன்ஸ் ஸ்ரீதரன் மரியதாசன் தயாரிக்கிறார்.

மூலக்கதை