SNCF - பணி பகிஷ்கரிப்பு! - நவிகோ அட்டைக்கு 50 வீத விலைக்கழிவு! - விபரம் உள்ளே!!

PARIS TAMIL  PARIS TAMIL
SNCF  பணி பகிஷ்கரிப்பு!  நவிகோ அட்டைக்கு 50 வீத விலைக்கழிவு!  விபரம் உள்ளே!!

கடந்த இரு மாதங்களாக SNCF தொடரூந்து ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதைத் தொடர்ந்து, பாதிப்புக்குள்ளான பயணிகளுக்கு நஷ்ட்ட ஈடு வழங்க தீர்மாணித்துள்ளதாக இல்-து-மாகாண முதல்வர் Valérie Pécresse தெரிவித்துள்ளார். 
 
ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நவிகோ பயண அட்டை பெற்றவர்கள், தங்கள் பயணங்களின் போது ஏற்பட்ட தங்கலுக்காக, ஜூன் மாத நவிகோ அட்டையை 50 வீத விலைக்கழிவுடன் பெற்றுக்கொள்ளலாம் என இல்-து-பிரான்சுக்கான பொது போக்குவரத்துக்களுக்கான ( Ile-de-France Mobilités ) முதல்வர் Valérie Pécresse தெரிவித்துள்ளார். மேஜூன் மாத அட்டைக்கு மாத்திரம் தற்போது இந்த விலைக்கழிவு அறிவிக்கப்படுள்ளது என்றபோதும், அதன் பின்னரான மாதங்களிலும் இந்த விலைக்கழிவு நீடிக்கலாம் எனவும் அறியமுடிகிறது. 
 
SNCF ஊழியர்கள் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் பணி பகிஷ்கரிப்புக்கான அட்டவணையை அறிவித்து, அதன் திகதிகளில் பணி பகிஷ்கரிப்பையும் மேற்கொண்டு வருகின்றனர். ஜூன் மாதத்திலும் இந்த பணி பகிஷ்கரிப்பு தொடருமானால், அதன் பின்னரும் விலைக்கழிவு இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை