அக்னி வெயில் எதிரொலி; கற்றாழை விற்பனை ஜரூர்

தினமலர்  தினமலர்
அக்னி வெயில் எதிரொலி; கற்றாழை விற்பனை ஜரூர்

சென்னை : வெயில் கார­ண­மாக, கற்­றாழை விற்­பனை சென்­னை­யில் அதி­க­ரித்­துள்­ளது.

சென்­னை­யில் மழைக்­கா­லத்தை தவிர்த்து மற்ற நாட்­களில் கற்­றாழை விற்­பனை அதி­க­மாக இருக்­கும். அதுவே கோடை­கா­லத்­தில் விற்­பனை மேலும் அதி­க­ரித்து காணப்­படும். தற்­போ­தைய அக்னி வெயில் கார­ண­மாக, திண்­டி­வ­னம், திண்­டுக்­கல் போன்ற பகு­தி­யி­லி­ருந்து சென்­னைக்கு தின­மும், 10 டன் கற்­றாழை விற்­ப­னைக்கு கொண்டு வரப்­ப­டு­கிறது.

இது­ கு­றித்து திண்­டி­வ­னத்தை சேர்ந்த சம்­பத் கூறி­ய­தா­வது: சென்னை மாவட்­டத்­தில் மட்­டும், 22 கடை­களில் கற்­றா­ழை சப்ளை செய்­கி­றோம். இதற்­காக சொந்­த­மாக திண்­டி­வ­னத்­தில் கற்­றாழை பயிர் செய்­துள்­ளோம். சாதா­ர­ண­மான நாட்­களில் ஒரு கடைக்கு, 150 கிலோ கற்­றாழை விற்­ப­னை­யா­கும். அதுவே கோடை காலத்­தில் இரண்டு மடங்­காக இருக்­கும்.

தற்­போது கற்­றாழை மொத்த விற்­ப­னை­யில் ஒரு டன், 12 ஆயி­ரம் ரூபா­யாக உள்­ளது. சில்­லரை விற்­ப­னை­யில் ஒரு கிலோ கற்­றாழை, 15 – 20 ரூபா­யாக உள்­ளது. இங்­கி­ருந்து கேரளா உள்­ளிட்ட அண்டை மாநி­லங்­க­ளுக்­கும், கற்­றா­ழையை மொத்­த­மாக அனுப்பி வரு­கி­றோம். இவ்­வாறு அவர் கூறி­னார்.

மூலக்கதை