தமிழகத்துக்குள், ‘இ – வே பில்’; தீவிர ஆலோசனையில் அரசு

தினமலர்  தினமலர்
தமிழகத்துக்குள், ‘இ – வே பில்’; தீவிர ஆலோசனையில் அரசு

மாநி­லத்­துக்­குள் நடை­மு­றைப்­ப­டுத்த உள்ள ‘இ–வே பில்’ஐ, பொருள்­கள் மீது விதிப்­பதா அல்­லது, சரக்கு மதிப்­பின் மீது விதிப்­பதா என, தமி­ழக அர­சு­டன், வணி­க­வரி துறை அதி­கா­ரி­கள் ஆலோ­ச­னை­யில் ஈடு­பட்­டுள்­ள­னர்.

மாநி­லங்­க­ளுக்­கி­டையே, 50 ஆயி­ரம் ரூபாய்க்கு மேல் மதிப்­புள்ள சரக்­கு­களை எடுத்­துச் செல்ல, ‘ஆன்­லைன்’ மூலம் அனு­மதி பெறும், ‘இ – வே பில்’, நாடு முழு­வ­தும் ஏப்.,1ல் அமல்­ப­டுத்­தப்­பட்­டது. மாநி­லத்­துக்கு உள்­ளேயே, சரக்­கு­களை எடுத்­துச் செல்ல, ‘இ –வே பில்’ பெறும் முறை­யும் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது.

ஜூன் முதல் அனைத்து மாநி­லங்­க­ளி­லும், மாநி­லத்­துக்­குள்­ளே­யும் சரக்­கு­களை அனுப்ப, இ – வே பில் பெறும் முறை நடை­மு­றைக்கு வர உள்­ளது. தமி­ழ­கத்­தில், ஜூன், 2ம் தேதி முதல் மாநி­லத்­துக்­குள், இ–வே பில் நடை­மு­றைக்கு வரு­கிறது. இதில், பொரு­ளைப் பொறுத்தா அல்­லது அதன் மதிப்பை பொறுத்தா இ – வே பில் வழங்­கு­வது என்ற ஆலோ­சனை நடந்து வரு­கிறது.

இது குறித்து, வணிக வரி துறை அதி­கா­ரி­கள் கூறி­ய­தா­வது: மாநி­லத்­துக்­குள், எந்­தெந்த பொருட்­க­ளுக்கு இ – வே பில் விதிக்­க­லாம் என்­பதை, அந்­தந்த மாநி­லங்­களே முடிவு செய்­து­கொள்ள, ஜி.எஸ்.டி., கவுன்­சில் அதி­கா­ரம் அளித்­து உள்­ளது. ஏற்­க­னவே, குஜ­ராத், கர்­நா­ட­க, கேரளா உட்­பட பல்­வேறு மாநி­லங்­களில் மாநி­லங்­க­ளுக்­குள்­ளான இ – வே பில், அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள நிலை­யில், சில மாநி­லங்­களில் பொருள்­க­ளின் அடிப்­ப­டை­யி­லும், சில மாநி­லங்­களில் சரக்கு மதிப்­பின் அடிப்­ப­டை­யி­லும் இ – வே பில் பதிவு செய்­யப்­ப­டு­கிறது.

பிற மாநி­லத்­தில் உள்ள நடை­மு­றை­கள் குறித்து, தமி­ழக அரசு விசா­ரித்து வரு­கிறது. தமி­ழ­கத்­தில், பல பொருள்­க­ளுக்கு இ–வே பில் விதிக்க கூடாது என, கோரிக்கை எழுந்­துள்­ளது. அத­னால், குறிப்­பிட்ட பொருள்­கள் அல்­லது சரக்கு மதிப்பு இவற்­றில் எதன் அடிப்­ப­டை­யில் இ – வே பில் பெற வேண்­டும் என்­பது குறித்து அர­சு­டன் ஆலோ­ச­னை­யில் ஈடு­பட்­டுள்­ளோம். இவ்­வாறு அதி­கா­ரி­கள் கூறி­னர்.

– நமது நிரு­பர் –

மூலக்கதை