கொண்டைக்கடலை இறக்குமதிக்கு தடை

தினமலர்  தினமலர்
கொண்டைக்கடலை இறக்குமதிக்கு தடை

சேலம் : கொண்­டைக்­க­டலை இறக்­கு­ம­திக்கு விதிக்­கப்­பட்ட தடை­யால், பொட்­டுக்­க­டலை விலை, கிலோ­வுக்கு, நான்கு ரூபாய் உயர்ந்­தது.

இந்­தி­யா­வின் கொண்­டைக்­க­டலை தேவை­யில், 50 சத­வீ­தத்தை, கனடா, அமெ­ரிக்கா, ஆஸ்­தி­ரே­லியா உள்­ளிட்ட வெளி­நா­டு­கள் பூர்த்தி செய்­கின்­றன. மீதி, உத்­தர பிர­தே­சம், மஹா­ராஷ்­டிரா, மத்­திய பிர­தே­சம், கர்­நா­டகா, ஆந்­திரா மற்­றும் தமி­ழ­கம் மூலம் பூர்த்தி செய்­யப்­ப­டு­கிறது. கடந்த, 2015, 2016, 2017ல், அதன் இறக்­கு­மதி அதி­க­ரித்து, உரிய விலை கிடைக்­கா­மல், விவ­சா­யி­கள் பயி­ரி­டு­வதை குறைத்­த­னர்.

நடப்­பாண்டு வெளி­நா­டு­களில், விளைச்­சல் பல மடங்கு அதி­க­ரித்து, குறைந்த விலைக்கு இங்கு வரத் துவங்­கி­ய­தால், விவ­சா­யி­கள் பாதிக்­கப்­பட்­ட­னர். இத­னால், மத்­திய அரசு, வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து கொண்­டைக்­க­ட­லையை இறக்­கு­மதி செய்ய, கடந்த வாரம் தடை விதித்­தது. இத­னால் அதை மூலப்­பொ­ரு­ளாக கொண்டு தயா­ரிக்­கப்­படும் பொட்­டுக்­க­டலை விலை, நேற்று கிலோ­வுக்கு, நான்கு ரூபாய் உயர்ந்­தது.

குறிப்­பாக, முதல் ரகம் கிலோ, 80க்கு விற்­றது, 84 ரூபாய், இரண்­டாம் ரகம், 75க்கு விற்­றது, 79 ரூபாய், மூன்­றாம் ரகம், 60க்கு விற்­றது, 64 ரூபா­யாக உயர்ந்­துள்­ளது. தொடர்ந்து, கடலை பருப்பு, கடலை மாவு ஆகி­ய­வற்­றின் விலை உயர வாய்ப்­புள்­ள­தாக, வியா­பா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

மூலக்கதை