கிங்பிஷர் உட்பட 18 நிறுவனங்கள் பங்கு வர்த்தகத்தில் இருந்து நீக்கம்

தினமலர்  தினமலர்
கிங்பிஷர் உட்பட 18 நிறுவனங்கள் பங்கு வர்த்தகத்தில் இருந்து நீக்கம்

புதுடில்லி : கிங்­பி­ஷர் உள்­ளிட்ட, 18 நிறு­வ­னங்­கள், பங்­குச்சந்தை பட்­டி­ய­லில் இருந்து நீக்­கப்­பட உள்­ள­தாக, தேசிய பங்­குச் சந்தை தெரி­வித்­துள்­ளது.

இதன்­படி, 30ம் தேதி முதல், கிங்­பி­ஷர் உள்­ளிட்ட, 1௮ நிறு­வ­னங்­கள், பங்­குச் சந்தை பட்­டி­ய­லில் இருந்து நீக்­கப்­படும். இந்­நி­று­வன பங்­கு­கள் மீது, வர்த்­த­கம் நடை­பெ­றாது. மும்பை பங்­குச் சந்தை, 11ம் தேதி, 200 நிறு­வ­னங்­க­ளின் பங்­கு­கள் மீதான வர்த்­த­கத்­திற்கு, ஆறு மாதங்­கள் தடை விதித்­தது.

போலி நிறு­வ­னங்­களை துவக்கி, கறுப்பு பண பரி­வர்த்­த­னை­யில் ஈடு­ப­டு­வதை தடுக்க, மத்­திய அரசு நட­வ­டிக்கை எடுத்து வரு­கிறது. இதன்­படி செயல்­ப­டா­மல், பெய­ர­ள­வில் இருந்த, இரண்டு லட்­சம் நிறு­வ­னங்­க­ளின் பதிவு ரத்து செய்­யப்­பட்­டுள்­ளது. கடந்த ஆண்டு, ஆகஸ்­டில், 331 போலி நிறு­வ­னங்­கள் மீது நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு, பங்­குச் சந்தை கட்­டுப்­பாட்டு அமைப்பு, பங்­குச் சந்தை நிறு­வ­னங்­க­ளுக்கு உத்­த­ர­விட்­டது.

அதன்­படி, மும்பை மற்­றும் தேசிய பங்­குச் சந்­தை­கள், நீண்ட காலம் செயல்­ப­டாத நிறு­வ­னங்­கள் மீது நட­வ­டிக்கை எடுத்து வரு­கின்­றன. பங்­குச் சந்தை பட்­டி­ய­லில் இருந்து நிரந்­த­ர­மாக நீக்­கப்­படும் நிறு­வ­னங்­க­ளின், முழு­நேர இயக்­கு­னர்­கள், நிறு­வ­னர்­கள் மற்­றும் குழும நிறு­வ­னம் ஆகி­யவை, 10 ஆண்­டுக­ளுக்கு, பங்­குச் சந்தை வர்த்­த­கத்­தில் ஈடு­பட முடி­யாது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

எவை எவை?
‘கிங்­பி­ஷர் ஏர்­லைன்ஸ், பிளித்­திகோ, அக்ரோ டச் இண்­டஸ்டிரிஸ், பிராட்­காஸ்ட் இனி­ஷி­யே­டிவ்ஸ், கிரெஸ்ட் அனி­மே­ஷன் ஸ்டு­டி­யோஸ், கே.டி.எல்., பயோ­டெக், கெம்­ராக் இண்­டஸ்­டி­ரிஸ் அண்டு எக்ஸ்­போர்ட்ஸ், லுமேக்ஸ் ஆட்­டோ­மோட்­டிவ் சிஸ்­டம்ஸ், நிசான் காப்­பர், ஸி ஆஸ்­தர் சிலி­கேட்ஸ், சூர்யா பார்­மா­சூ­டிக்­கல்ஸ் உள்­ளிட்ட, 18 நிறு­வ­னங்­கள், தேசிய பங்­குச் சந்­தை­யில் இருந்து நீக்­கப்­பட உள்­ளன.

மூலக்கதை