Vélib - 699 நிலையங்கள் தயார்! - 7000 துவிச்சக்கர வண்டிகள் பயன்பாட்டுக்கு!!

PARIS TAMIL  PARIS TAMIL
Vélib  699 நிலையங்கள் தயார்!  7000 துவிச்சக்கர வண்டிகள் பயன்பாட்டுக்கு!!

நேற்று வெள்ளிக்கிழமை Vélib துவிச்சக்கர வண்டி சேவைகளுக்காக 699 நிலையங்கள் தற்போது தயார் நிலையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
1400 நிலையங்கள் மற்றும் மொத்தமாக அமைக்கப்பட திட்டமிடப்பட்ட நிலையில், பல்வேறு தடங்கல்கள் காரணமாக கடந்த ஜனவரி 1 ஆம் திகதியில் இருந்து இதுவரை மொத்தமாக 699 நிலையங்கள் தயார் நிலையில் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாத இறுதிக்குள் இவை 800 நிலையங்களாக மாற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 7000 துவிச்சக்கர வண்டிகள் தற்போது பரிஸ் நகர மக்களுக்கு தயாராக இருப்பதாக புதிய நிறுவனமான Smovengo அறிவித்துள்ளது. 
 
நிலையங்கள் மிக குறைந்த அளவே தயாரான நிலையில், கடந்த நான்கு மாதங்களுக்கு இச்சேவைகள் இலவசமாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
 

மூலக்கதை