ஹரிக்கேன் ரிலீஃப் டிவென்டி 20 சேலஞ்ச் போட்டியில் சந்தீப் லாமிச்சானேவுக்கு வாய்ப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஹரிக்கேன் ரிலீஃப் டிவென்டி 20 சேலஞ்ச் போட்டியில் சந்தீப் லாமிச்சானேவுக்கு வாய்ப்பு

இங்கிலாந்து: மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி  வரும் 31ம் தேதி   இங்கிலாந்திலுள்ள  லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் விளையாட  உலகின் பல்வேறு அணிகளிலிருந்து வீரர்கள்  தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

இந்தப் போட்டியில் கலந்து கொள்ள இருக்கும்  ‘வேர்ல்டு லெவன்’ அணியில் நேபாளத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் சந்தீப் லாமிச்சானே இடம்பிடித்துள்ளார். இந்தப் போட்டியில் ஆட இருக்கும் மிக குறைந்த வயதுள்ள வீரர் இவர் ஆவார்.

கடந்த ஆண்டு ஏற்பட்ட புயலில் கரீபிய கிரிக்கெட் மைதானங்கள் சேதமடைந்தன. இதைச் சீரமைக்க நிதி திரட்டும் பொருட்டு மேற்கிந்திய தீவுகள் மற்றும் வேர்ல்டு லெவன் அணிகள் மோதும் ‘ஹரிக்கேன் ரிலீஃப் டிவென்டி 20 சேலஞ்ச்’ போட்டி இங்கிலாந்தின் புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் மே 31ம் தேதி நடைபெறவுள்ளது.

இந்தத் தொடருக்கான வேர்ல்டு லெவன் அணியில் நேபாளத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் சந்தீப் லாமிச்சானே இடம்பிடித்துள்ளார். இவர் தற்போது ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாடி வருகிறார்.



இதுகுறித்து சந்தீப் லாமிச்சானே நிருபர்களிடம் கூறியதாவது:  மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான வேர்ல்டு லெவன் அணியில் இடம்பிடித்ததைப் பெருமையாகக் கருதுகிறேன். சர்வதேச கிரிக்கெட்டில் எங்கள் நாடு கால் பதிப்பதற்கான முதல்படி.

இது எங்கள் நாட்டுக்குக் கிடைத்த பெருமை. இதுவரை நான் டிவியில் பார்த்து ரசித்த பிரபலங்களுடன் பயிற்சி எடுக்க ஆவலாக உள்ளேன்.

இது என் கிரிக்கெட் வாழ்வில் திருப்புமுனையாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிலையில் இந்த ஆட்டத்தில் விளையாட இருந்த வங்கதேச அணியின் ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் தன் சொந்தக் காரணங்களுக்காக இந்தத் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இவருக்கான மாற்று வீரரை ஐசிசி விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

.

மூலக்கதை