ராஜஸ்தானை வீழ்த்தி முதலிடத்தில் சன்ரைசர்ஸ்: சிறப்பான பவுலிங் தொடர்வதால் கேப்டன் வில்லியம்சன் உற்சாகம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ராஜஸ்தானை வீழ்த்தி முதலிடத்தில் சன்ரைசர்ஸ்: சிறப்பான பவுலிங் தொடர்வதால் கேப்டன் வில்லியம்சன் உற்சாகம்

ஜெய்ப்பூர்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 28வது லீக் போட்டி, ஜெய்ப்பூரில் நேற்று மாலை நடைபெற்றது. ராஜஸ்தான் ராயல்ஸ்-சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.

முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ், 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்களை எடுத்தது. கேப்டன் கேன் வில்லியம்சன் 63 ரன்கள் (43 பந்துகள், 7 பவுண்டரி, 2 சிக்சர்), அலெக்ஸ் ஹேல்ஸ் 45 ரன்கள் (39 பந்துகள், 4 பவுண்டரி) விளாசினர்.

ராஜஸ்தான் தரப்பில் ஜோப்ரா ஆர்ச்சர் 3, கிருஷ்ணப்பா கௌதம் 2, உனத்காட், இஷி சோதி தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் பேட்டிங் செய்த ராஜஸ்தான், 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் மட்டுமே எடுத்து, 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

கேப்டன் ரஹானே 65 ரன்கள்* (53 பந்துகள், 5 பவுண்டரி, 1 சிக்சர்), சஞ்சு சாம்சன் 40 ரன்கள் (30 பந்துகள், 3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். ஆனால் எஞ்சிய பேட்ஸ்மேன்கள் போதிய பங்களிப்பை வழங்காததால், ராஜஸ்தான் அணியால் வெற்றி பெற முடியவில்லை.

சன்ரைசர்ஸ் தரப்பில், சித்தார்த் கவுல் 2, சந்தீப் சர்மா, பாசில் தம்பி, ரஷித்கான், யூசுப் பதான் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம், புள்ளி பட்டியலில் சன்ரைசர்ஸ் முதலிடத்திற்கு முன்னேறியது.

வெற்றி குறித்து சன்ரைசர்ஸ் கேப்டன் கேன் வில்லியம்சன் கூறுகையில், ‘’கடந்த சில போட்டிகளில் எங்களின் பந்து வீச்சு நம்ப முடியாத வகையில் மிகவும் சிறப்பாக உள்ளது.

அணியின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி இது’’ என்றார்.

.

மூலக்கதை