ஜனாதிபதியின் செல்வாக்கு அதிகரிப்பு!!

PARIS TAMIL  PARIS TAMIL
ஜனாதிபதியின் செல்வாக்கு அதிகரிப்பு!!

ஜனாதிபதி இம்மானுவ்ல் மக்ரோன் மற்றும் பிரதமர் எத்துவ பிலிப்பின் செல்வாக்கு ஏப்ரல் மாதத்தில் அதிகரித்துள்ளது. 
 
மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில், Notre-Dame-des-Landes கலவரம், SNCF ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல அரசியல் சிக்கல்களை அரசு சந்தித்திருந்த போதும், தற்போது வெளியாகியுள்ள புதிய கருத்துக்கணிப்பின் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் செல்வாக்கு அதிகரித்துள்ளது என் தெரிவிக்கப்பட்டுள்ளது. iFop நிறுவனம் எடுத்துள்ள மாதாந்த கருத்துக்கணிப்பில், இம்மானுவல் மக்ரோனுக்கு இரண்டு புள்ளிகளும் எத்துவா பிலிப்புக்கு இரண்டு புள்ளிகளும் என ஏப்ரல் மாதத்தில் செல்வாக்கு அதிகரித்துள்ளது. தற்போது மக்ரோன் 44 புள்ளிகளுடனும், எத்துவா பிலிப் ஒரு புள்ளி அதிகமாக 45 புள்ளிகளுடனும் உள்ளனர். 
 
மக்ரோனின் செயற்பாட்டில், 5 வீதமானவர்கள் 'மிகவும் திருப்த்தி' எனவும், 39 வீதமானவர்கள் 'திருப்த்தி' எனவும் தெரிவித்துள்ளனர். மீதமுள்ள 55 வீதமானவர்களில், 23 வீதமானவர்கள் 'மிகவும் திருப்த்தியில்லை' எனவும், 32 வீதமானவர்கள் 'திருப்த்தியில்லை' எனவும் தெரிவித்துள்ளார்கள். 
 
*கருத்துக்கணிப்பு 18 வயதுக்கு மேற்பட்ட 1,949 பேர்களிடம், ஏப்ரல் 12 தொடக்கம் 21 வரையான நாட்களின் இணையம் மற்றும் தொலைபேசி மூலம் எடுக்கப்பட்டது.

மூலக்கதை