மகேஷ்பாபு படத்திற்கு வாழ்த்து தெரிவித்த ரகுல்பிரீத் சிங்

தினமலர்  தினமலர்
மகேஷ்பாபு படத்திற்கு வாழ்த்து தெரிவித்த ரகுல்பிரீத் சிங்

மகேஷ்பாபு நடித்து திரைக்கு வந்துள்ள படம் பாரத் அனே நேனு. கியாரா அத்வானி நாயகியாக நடித் துள்ள இந்த படத்தை கொரட்டல சிவா இயக்கியிருக்கிறார். இதற்கு முன்பு மகேஷ்பாபு நடித்து திரைக்கு வந்த ஸ்பைடர் படம் அவருக்கு அதிர்ச்சி தோல்வியாக அமைந்த நிலையில், இந்த படம் பாக்ஸ் ஆபீசில் வசூல் சாதனை புரிந்து வருகிறது.

இந்நிலையில், ஸ்பைடர் படத்தில் மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக நடித்திருந்த ரகுல் பிரீத் சிங் இப் படத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் விடுத் துள்ள செய்தியில், பாரத் அனே நேனு ஒரு எழுச்சியூட்டும் திரைப்படம். கதையும், காட்சிகளும் மனதை தொடுகின்றன. இப்படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மூலக்கதை