காட்டேரி படப்பிடிப்பு தொடங்கியது

தினமலர்  தினமலர்
காட்டேரி படப்பிடிப்பு தொடங்கியது

மெகா பட்ஜெட் படங்களை தயாரித்து வந்த ஸ்டூடியோக கிரீன் நிறுவனம் தற்போது மீடியம் மற்றும் சிறுபட்ஜெட் படங்களை தயாரிக்க தொடங்கியுள்ளது. தமிழ், தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் நோட்டா படத்தை தயாரிக்கிறது. ஹரஹரமகாதேவகி என்ற அடல்ட் படத்தை விநியோகம் செய்து லாபம் பார்த்த ஸ்டூடியோ கிரீன் அந்தப் படத்தை இயக்கிய சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்க தற்போது இருட்டு அறையில் முரட்டு குத்து என்கிற அடல்ட் காமெடி படத்தையும், கஜினிகாந்த் என்ற பொது காமெடி படத்தையும் தயாரிக்கிறது.

இதற்கிடையில் பல்லு படாம பார்த்துக்கணும் என்ற படத்தையும் தயாரிக்கிறது.

தற்போது பல மாதங்களுக்கு முன்பு அறிவித்த காட்டேரி படத்தை நேற்று பூஜையுடன் தொடங்கியது. கப்பல் படத்தில் நடித்த சோனம் பாஜ்வா, வைபவ் நடித்த காட்சிகள் நேற்று படமாக்கப்பட்டது. தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, இயக்குனர் டிகே, ஒளிப்பதிவாளர் விக்கி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஒரே கட்டத்தில் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.

மூலக்கதை