அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் மரம் நடும் மக்ரோன்! - பிரான்சில் இருந்து எடுத்துச்செல்கிறார்!!

PARIS TAMIL  PARIS TAMIL
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் மரம் நடும் மக்ரோன்!  பிரான்சில் இருந்து எடுத்துச்செல்கிறார்!!

நாளை திங்கட்கிழமை ஜனாதிபதி இமானுவல் மக்ரோன், பிரிஜித் மக்ரோன் இருவரும் அமெரிக்காவுக்கு பயணமாக உள்ளனர். இதுகுறித்த செய்தியினை முன்னதாக வழங்கியிருந்தோம். 
 
தற்போது இது குறித்த மேலதிக செய்திகள் சில வெளியாகியுள்ளன. அதில், இம்மானுவல் மக்ரோன், வடக்கு பிரான்சில் இருந்து வரவழைக்கப்பட்ட 'ஓக்' (Oak) வகை சிறிய மரக்கன்று ஒன்றை கொண்டு செல்கின்றார்.  இரு நாட்டுக்குமான உறவின் பலத்தை உணத்தும் விதமாக இந்த மரக்கன்று நட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
தவிர, வெள்ளை மாளிகையின் தோட்டத்தில், இம்மானுவல் மக்ரோனே இந்த மரக்கன்றை தன் கையால் நட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இன்று ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவின் செய்தி தொலைக்காட்சியில் ஒளிபரபாக உள்ள மக்ரோனின் நேர்காணல், கடந்த வெள்ளிக்கிழமை எலிசே மாளிகையில் வைத்து பதிவு செய்யபட்டிருந்தது. மக்ரோனை நேர்காணல் செய்திருந்த Chris Wallace எனும் தொகுப்பாளர் இத்தகவல்களை வழங்கியுள்ளார்.

மூலக்கதை