நூறாவது படத்தை நோக்கி யோகிபாபு

தினமலர்  தினமலர்
நூறாவது படத்தை நோக்கி யோகிபாபு

சுப்ரமணியம் சிவா இயக்கத்தில், யோகி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பாபு. இதன் பிறகு யோகி பாபுவாக மாறினார். தொடர்ந்து வில்லன் ரோல்களில் நடித்தவர் கலகலப்பு, பட்டத்து யானை, மான் கராத்தே, யாமிருக்க பயமேன் படங்களில் காமெடி ரோலில் நடித்து பிரபலமானார்.

தற்போது, நூறாவது படத்தை நோக்கி முன்னேறியிருக்கிறார். அவர் கூறியதாவது: நானே எதிர்பார்க்காத ஒரு விஷயம். என்னை வைத்து படம் இயக்கிய அனைத்து இயக்குநர்கள் மற்றும் கடவுளுக்கு நன்றி. சினிமாவில் இன்னும் நிறைய சாதிக்க வேண்டும் என நினைக்கிறேன். ரசிகர்கள் இல்லாமல் எந்த நடிகனும் இல்லை. ரசிகர்களுக்கும் நன்றி என்றார்.

மூலக்கதை