பிக்பாஸ் சீசன்-2, நானிக்கு 3.5கோடி சம்பளம்

தினமலர்  தினமலர்
பிக்பாஸ் சீசன்2, நானிக்கு 3.5கோடி சம்பளம்

தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை ஜூனியர் என்டிஆர் வழங்கினார். அந்த நிகழ்ச்சியை நடத்த அவருக்கு ரூ. 8கோடி சம்பளம் வழங்கப்பட்டது. இந்நிலையில், பிக்பாஸ் சீசன்-2நிகழ்ச்சியை நானி நடத்தப்போகிறார். ஆனால் நானிக்கு 3.5கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம்.

அதாவது, ஒரு படத்தில் நடிக்க 60நாட்கள் கால்சீட் கொடுக்கும் நானி 7முதல் 9கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார். ஆனால் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அவர் 30நாட்கள் கால்சீட் கொடுத்திருப்பதால், அவரது சினிமா சம்பளமான 7கோடியை கருத்தில் கொண்டு 3.5கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம்.

மூலக்கதை