Breaking: மன்சூர் அலிகான் கைது ஏன்.? போலீஸ் கமிஷனரிடம் சிம்பு நேரில் கேள்வி

FILMI STREET  FILMI STREET
Breaking: மன்சூர் அலிகான் கைது ஏன்.? போலீஸ் கமிஷனரிடம் சிம்பு நேரில் கேள்வி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டி ஒட்டு மொத்த தமிழகமே போராடி வந்த வேளையில் சென்னையில் ஐபிஎல் போட்டியை நடத்த கூடாது என பலர் போராடி வந்தனர்.

அந்த போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட நடிகர் மன்சூர் அலிகான் தற்போது வரை சிறையில் உள்ளார்.

அதற்காக நியாயம் கேட்டு கமிஷ்னர் ஆபிஸ் செல்ல இருப்பதாக நடிகர் சிம்பு நேற்று இரவு ஒரு வீடியோ பதிவை வெளியிட்டிருந்தார்.

அந்த வீடியோவில் அவர், “ மனிதநேய அடிப்படையில் ஒரு மனித உரிமைக்காக மனிதாபிமானம் கொண்ட ஒரு மண் வாசனைக் கொண்ட, மதச்சார்பற்ற அரசியல் சார்பற்ற, ஒரு தனி மனிதனை தமிழ் கலைஞனை, அண்ணன் மன்சூர் அலிகான் அவர்களை விடுதலை செய்யக் கோரி கமிஷ்னர் ஆபீஸ் சென்று மனுக்கொடுக்க இருக்கிறேன்” என்று அவர் பேசியிருந்தார்.

அதன்படி இன்று காலை சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் வந்தார். கூடவே அவரது ரசிகர்களும் வந்திருந்தனர்.

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அனுமதியின்றி கூடியதால், சிம்பு ரசிகர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த சிம்பு கூறியதாவது…

‘”நடிகர் மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்டதற்கான காரணத்தை தெரிந்துக் கொள்ள வந்துள்ளேன். அவரை விடுதலை செய்யும்படி நான் கோரவில்லை, மனுவும் அளிக்கவில்லை மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதற்கான காரணத்தையும், எப்போது விடுவிக்கப்படுவார் என்பதையும் அறிய வந்தேன்.

மன்சூர் அலிகான் தவறாக பேசியிருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். அவரை கைது செய்தது சரியென்றால் அவரை போல் பேசிய அனைவரையும் கைது செய்ய வேண்டும்.” என்றார் அவர்.

Simbu at Police Commissioner office to question Why Mansoor Ali Khan arrested

மூலக்கதை