பெடரேஷன் கோப்பை டென்னிஸ் : அரை இறுதி இன்று ஆரம்பம்

தினகரன்  தினகரன்

ஸ்டட்கர்ட்: மகளிர் அணிகள் மோதும் பெடரேஷன் கோப்பை டென்னிஸ் போட்டித் தொடரின் உலக பிரிவு அரை இறுதிச் சுற்று இன்று தொடங்குகிறது.உலக பிரிவு முதலாவது அரை இறுதியில் ஜெர்மனி - செக் குடியரசு அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி ஜெர்மனியின் ஸ்டட்கர்ட் நகரில் நடைபெறுகிறது. பிரான்சில் நடைபெறும் 2வது அரை இறுதியில் பிரான்ஸ் - அமெரிக்கா மோதுகின்றன. இது தவிர உலக பிரிவு 2, பிரிவு 3 பிளே ஆப் சுற்று போட்டிகள் இன்று தொடங்கி 2 நாள் நடைபெற உள்ளன. இதில் பெலாரஸ் - ஸ்லோவகியா, ரோமானியா - சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா - நெதர்லாந்து, இத்தாலி - பெல்ஜியம், ரஷ்யா - லாத்வியா, ஸ்பெயின் - பராகுவே, கனடா - உக்ரைன், ஜப்பான் - இங்கிலாந்து அணிகள் களமிறங்குகின்றன.

மூலக்கதை