நோக்கியா ஆலைக்கு பாக்ஸ்கான், ‘குறி’

தினமலர்  தினமலர்
நோக்கியா ஆலைக்கு பாக்ஸ்கான், ‘குறி’

சென்னை : சென்­னை­யில், வரி பிரச்னை கார­ண­மாக மூடப்­பட்ட நோக்­கியா மொபைல் ­போன் தொழிற்­சா­லையை ஏற்று நடத்த, தைவா­னைச் சேர்ந்த பாக்ஸ்­கான் நிறு­வ­னம் கள­மி­றங்­கி­யுள்­ளது.

இது குறித்து, அரசு அதி­காரி ஒரு­வர் கூறி­ய­தா­வது: தமி­ழக அர­சுக்­கும், நோக்­கியா நிறு­வ­னத்­திற்­கும் இடை­யி­லான, 1,600 கோடி ரூபாய் வரிப் பிரச்­னை­யில் சுமுக தீர்வு ஏற்­பட்­டுள்­ளது. இது தொடர்­பாக, மத்­திய அர­சுக்­கும், பின்­லாந்து அர­சுக்­கும் இடையே, பரஸ்­பர ஒப்­பந்த நடை­மு­றை­யின் கீழ், உடன்­பாடு ஏற்­பட்­டுள்­ள­தாக, டில்லி அரசு வட்­டா­ரங்­கள் தெரி­வித்­து உள்­ளன.

இத­னால், சென்னை அருகே அமைந்­துள்ள நோக்­கியா தொழிற்­சா­லையை விற்­ப­தற்­கான தடை நீங்கி விட்­டது. இந்­நி­று­வ­னத்­திற்கு, ஏற்­க­னவே, தைவா­னைச் சேர்ந்த பாக்ஸ்­கான் நிறு­வ­னம், மொபைல் போன் உதி­ரி­பா­கங்­களை தயா­ரித்து அளித்து வந்­தது. அத­னால், நோக்­கி­யா­வின் ஆலையை வாங்­கும் முயற்­சி­யில் பாக்ஸ்­கான் நிறு­வ­னம் ஈடு­பட்­டுள்­ளது.

விரை­வில், இது குறித்த அதி­கா­ர­பூர்வ தக­வல்­கள் வெளி­யா­கும் என, எதிர்­பார்க்­க­லாம். இவ்­வாறு அவர் தெரி­வித்­தார்.

மூலக்கதை