டாலர், யூரோ மதிப்பு உயர்வு: ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி

தினமலர்  தினமலர்
டாலர், யூரோ மதிப்பு உயர்வு: ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி

திருப்பூர் : டாலர், யூரோ உள்­ளிட்ட அன்­னிய பணத்­தின் மதிப்பு உயர்­வால், திருப்­பூர் ஏற்­று­ம­தி­யா­ளர்­கள் மகிழ்ச்சி அடைந்­து உள்­ள­னர்.

திருப்­பூர் ஆடை ஏற்­று­மதி நிறு­வ­னங்­கள், உல­க­ளா­விய வர்த்­த­கர்­க­ளி­டம், ‘ஆர்­டர்’ பெற்று, ஆடை­கள் தயா­ரிக்­கின்­றன. ஆடை­க­ளுக்­கான விலை, அன்­னிய பணத்­தின் மதிப்பு அடிப்­ப­டை­யி­லேயே நிர்­ண­யிக்­கப்­ப­டு­கிறது.

ஐரோப்­பிய நாடு­க­ளுக்­கான ஆடை­க­ளுக்கு, யூரோ மதிப்­பி­லும்; பிரிட்­டன் நாட்­டுக்­கான ஆடை­க­ளுக்கு, பவுண்டு மதிப்­பி­லும்; அமெ­ரிக்கா, கனடா, ஆஸ்­தி­ரே­லியா, மெக்­சிகோ உள்­ளிட்ட நாடு­க­ளுக்­கான ஆர்­டர்­க­ளுக்கு, அமெ­ரிக்க டாலர் மதிப்­பி­லும் விலை நிர்­ண­யிக்­கப்­ப­டு­கிறது. இத­னால், அன்­னிய பண மதிப்­பில் ஏற்­படும் திடீர் இறக்­கம், ஏற்­று­ம­தி­யா­ளர்­க­ளுக்கு பாதிப்பை ஏற்­ப­டுத்­தும்; உயர்வு ஏற்­பட்­டால், லாபம் அதி­க­ரிக்­கும். நடப்­பாண்டு ஜன­வரி முதல், டாலர், யூரோ, பவுண்டு ஆகி­ய­வற்­றின் மதிப்பு உயர்ந்து வரு­கிறது.

ஜன­வரி மாதம், 63 ரூபா­யாக இருந்த டாலர் மதிப்பு, தற்­போது, 66 ரூபா­யா­க­வும், 75 ரூபா­யாக இருந்த யூரோ மதிப்பு, 81 ரூபா­யா­க­வும், 85 ரூபா­யாக இருந்த பவுண்டு மதிப்பு, 93 ரூபா­யா­க­வும் உயர்ந்­துள்­ளன.

இது குறித்து திருப்­பூர் ஏற்­று­ம­தி­யா­ளர் சங்க பொதுச்­செ­ய­லர் விஜ­ய­கு­மார் கூறி­ய­தா­வது: நான்கு மாதங்­க­ளாக, டாலர், யூரோ, பவுண்டு ஆகி­ய­வற்­றின் மதிப்பு உயர்ந்து வரு­வ­தால், ஆடை­க­ளுக்கு கூடு­தல் விலை பெற முடி­யும். டாலர் மதிப்­பில் நிர்­ண­யிக்­கும் போது, ஆடை ஒன்­றுக்கு, 5 சத­வீ­தம்; யூரோ­வில் பெறும் ஆர்­டர்­க­ளுக்கு, 8 சத­வீ­தம்; பவுண்ட்­டில் நிர்­ண­யிக்­கும்­போது, 10 சத­வீ­தம் வரை, கூடு­தல் விலை கிடைக்­கும்.

ஏற்­று­ம­தி­யா­ளர்­கள் பல இன்­னல்­களை சந்­தித்து வரும் தரு­ணத்­தில், அன்­னிய பணம் மதிப்பு உயர்வு, இத்­து­றை­யி­ன­ருக்கு ஆறு­தல் அளிக்­கிறது. அடுத்த ஓராண்­டுக்கு, அன்­னிய பணம் மதிப்பு உயர்வு நிலை தொட­ரும் என, பொரு­ளா­தார வல்­லு­னர்­கள் கூறு­கின்­ற­னர். இத­னால், ஏற்­று­மதி துறை நன்கு வளர்ச்சி அடை­யும். இவ்­வாறு அவர் கூறி­னார்.

மூலக்கதை