சிறிய நிறுவனங்களுக்கு விதியை தளர்த்த ரிசர்வ் வங்கிக்கு கோரிக்கை

தினமலர்  தினமலர்
சிறிய நிறுவனங்களுக்கு விதியை தளர்த்த ரிசர்வ் வங்கிக்கு கோரிக்கை

புதுடில்லி : ‘குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்­க­ளின் கடன் தொடர்­பான விதி­மு­றையை தளர்த்த வேண்­டும்’ என, ரிசர்வ் வங்­கிக்கு, மத்­திய அரசு கோரிக்கை விடுத்­துள்­ளது.

ரிசர்வ் வங்கி விதி­யின்­படி, ஒரு நிறு­வ­னம், 90 நாட்­கள் வரை, வங்­கி­யில் வாங்­கிய கடனை திரும்­பச் செலுத்­தா­மல் இருந்­தால், அது, வாராக் கடன் பட்­டி­ய­லில் சேர்க்­கப்­பட்டு விடும். இத்­த­கைய நிறு­வ­னத்­திற்கு, வங்கி மேற்­கொண்டு கடன் வழங்­காது. இத­னால், நிறு­வ­னங்­கள் தொழிலை தொடர முடி­யா­மல், முடங்­கும் நிலை உண்­டா­கும். இத்­த­கைய நிலைக்கு, குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்­கள் ஆளா­வதை தவிர்க்­கும் பொருட்டு, அவற்­றுக்­கான, வாராக்­க­டன் தொடர்­பான விதி­மு­றையை தளர்த்த வேண்­டும் என, ரிசர்வ் வங்­கிக்கு, மத்­திய அரசு தெரி­வித்­துள்­ளது.

இது குறித்து, மத்­திய குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்­கள் துறை கூடு­தல் செய­லர், ராம் மோகன் மிஸ்ரா கூறி­ய­தா­வது: ரிசர்வ் வங்கி விதி­மு­றைப்­படி, 90 நாட்­கள் வரை கடனை திரும்­பச் செலுத்­தா­மல் இருந்­தால், அந்த கடன் வாராக்­க­டன் பட்­டி­ய­லில் சேர்க்­கப்­ப­டு­கிறது. இதை, குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்­க­ளுக்கு, 180 நாட்­க­ளாக உயர்த்த வேண்­டும் என, ரிசர்வ் வங்­கி­யி­டம் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இது தொடர்­பாக, குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்­கள் துறை செய­லர், ஏ.கே.பாண்டா, ரிசர்வ் வங்கி அதி­கா­ரி­க­ளு­டன் பேச்சு நடத்­தி­யுள்­ளார்.

குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்­கள் புரி­யும் தொழில்­களில், உட­ன­டி­யாக பணம் கிடைப்­ப­தில்லை. சந்தை சார்ந்த தொழில்­களில், எதிர்­பா­ராத சுணக்­கங்­கள் ஏற்­ப­ட­வும் வாய்ப்­புண்டு. அத்­த­கைய தரு­ணங்­களில் கிடைக்­கும், வங்­கிக் கடன் தான், தொழில் முடங்­கா­மல், தொடர்ந்து இயங்க கைகொ­டுக்­கிறது. இவ்­வாறு அவர் கூறி­னார்.

மூலக்கதை